திருச்சி மாவட்டம், சுகாதார பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள மாவட்ட தரவு உதவியாளர், திட்ட மேலாளர் மற்றும் ஆலோசகர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், மாவட்ட நல சங்கம் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடங்களுக்கு, அக்.,12 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நிர்வாகம் : திருச்சி மாவட்ட துணை இயக்குனர் அலுவலகம்
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
Ø தரவு உதவியாளர்
Ø திட்ட மேலாளர்
Ø ஆலோசகர்
கல்வி தகுதி
திட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க, BAMS, BUMS, BSMS, BNYS துறையில் இளங்கலை படித்திருக்க வேண்டும்.
தரவு உதவியாளர் பணிக்கு, பி.டெக்., பி.சி.ஏ., பி.பி.ஏ., ஐ.டி. உள்ளிட்ட துறைகளில், இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் 'டைப்பிங்' தெரிந்திருக்க வேண்டும்.
ஆலோசகர் பணிக்கு, BSMS படித்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்து இருக்க வேண்டும்.

நிபந்தனைகள்
Ø இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது (11 மாதங்கள்)
Ø எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படாது.
Ø பணிகளுக்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அறிவிக்கப்பட்ட பணிக்கு தேவையான ஆவணங்களோடு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் வாயிலாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
துணை இயக்குநர்,
சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
ரேஸ்கோர்ஸ் ரோடு,
ஜமால் முகம்மது கல்லூரி அருகில்,
டி.வி.எஸ். டோல்கேட்,
திருச்சிராப்பள்ளி - 620 020
தொலைப்பேசி எண் -0434 - 2333112
விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்டத்தின் https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/ என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்ப்பட்ட விண்ணப்பங்கள் 12.10.2023 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ/தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications












