வேலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் குழந்தைகள் நலக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் கலந்த கணிணி இயக்குபவர் பணிக்கு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பணிக்கு தேவையான கல்வி தகுதி மற்றும் சம்பள விவரம் உள்ளிட்ட விவரங்களை கீழே தெரிந்து கொள்ளலாம். இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பகள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : வேலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
உதவியாளர் கலந்த கணிணி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator)
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.10.2023
கல்வி தகுதி
இந்த பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தட்டச்சு தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DCA, PGDCA, சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி இயக்கத்தில் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதியம் / வயது வரம்பு
முற்றிலும் தற்காலிக பணியாகும். இதற்கு மாத ஊதியமாக ரூ.11,916 வழங்கப்படும்.
பணியானது தொகுப்பூதியம் அடிப்படையிலானது. வயது வரம்பை பொறுத்தவரை, 01.07.2023 தேதிப்படி 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://vellore.nic.in/ என்ற மாவட்ட இணையதள முகவரியில் இருந்து மாதிரி விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, உரிய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் நகலுடன் பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்களை 05.10.2023 அன்று 5.45 மணிக்குள் அல்லது அதற்கு முன் சரியான முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முக்கியம் மறக்காதீங்க...!
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அண்ணா சாலை (சுற்றுலா மாளிகை எதிரில்)
வேலூர் - 632 011.


Click it and Unblock the Notifications












