டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில், இன்ஸ்பெக்டர், இணைப் பதிவாளர், துணைச் செயலாளர், பிரிவு அதிகாரி, தனிச் செயலாளர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு அயல் பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பதவிக்கு உரிய தகுதியை கொண்டிருக்கும் 56 வயதுக்கு உட்பட்டவர்கள் ஜனவரி 15,2024க்குள் அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
நிர்வாகம் : தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission)
மேலாண்மை : மத்திய அரசு
காலி பணியிடம் எண்ணிக்கை: 37
விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன்
பணியிடம் : டெல்லி

பணி விவரம் :
v இணை பதிவாளர்
v துணை செயலாளர்
v நூலகர்/ ஆவண அதிகாரி
v மூத்த கணக்கு அதிகாரி
v பிரிவு அதிகாரி
v தனிச் செயலாளர்
v உதவி கணக்கு அதிகாரி
v ஆய்வாளர்
v உதவியாளர்
v உதவி புரோகிராமர்
v கணக்காளர்
v சுருக்கெழுத்தர் கிரேட்-டி
ப்ளீஸ் மறக்காதீங்க...!
காலிப் பணியிடங்களில் அயல் பணியாக நியமிக்கப் படுபவர்களின் குறைந்தபட்சம் ரூ.25,500 முதல் அதிகபட்சம் ரூ.2.15 லட்சம் வரை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிகிரி., எல்.எல்.பி., டிப்ளமோ, முதுநிலை, எம்.எஸ்.சி., ஆகிய கல்வித் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப உரிய கல்வித் தகுதியை பெற்றிருத்தல் அவசியம் ஆகும். கூடுதல் கல்வி தகுதி தொடர்பான விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.
ஒரு பதவிகளுக்கு மேல் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள், ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Under Secretary
National Human Rights Commission,
Manav Adhikar Bhawan,
C Block,
GPO Complex, INA,
New Delhi -110023
என்ற முகவரிக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட மாதிரி விண்ணப்பங்களை கோரப்பட்ட சான்றிதழ் மற்றும் விண்ணப்பங்களை இணைத்து, ஜனவரி 15 ஆம் தேதிக்குள் கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
கடைசி தேதிக்கு பின் வரப்பெறும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.


Click it and Unblock the Notifications












