அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.31 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்.இ, எம்.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
பணி : Junior Research Fellow
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி : Manufacturing அல்லது Materials பாடப்பிரிவுகளில் அல்லது அது தொடர்பான பாடங்களில் எம்.இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.31,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் sivanandha.prabu@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவத்தினை 20.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.