சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர், உதவி நூலகர், உதவி இயக்குநர் (Assistant Professors, Assistant Librarians, Assistant Directors) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://rcell.annauniv.edu/aurecruitment_new_cc/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
தமிழகத்தின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக அறியப்படுவது அண்ணா பல்கலைக்கழகம். எத்தனையோ மேதைகளை உருவாக்கித் தந்துள்ளது இந்தக் கல்வி நிறுவனம்
1978 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4-ம் தேதி, சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாகப் பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது.

தலைநகர் சென்னையில் பெருமையுற அமைந்துள்ள இந்த அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தலைநிமிர்ந்து நிற்கிறது.
1978-ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு அசத்தி வருகிறது. இதன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும், துணைக்கோள் வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் எழிலுற அமைந்து உள்ளன.
நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் இந்த பல்கலைக்கழகம் 10-வது இடத்தில் உள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களுள் நான்காவது இடத்திலும், பொறியியலில் எட்டாவது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாம், புகழ்பெற்ற தமிழ் நகைச்சுவை நாடக ஆசிரியரும், சினிமா கதையாசிரியரும், நடிகருமான கிரேசி மோகன், பிரபல தமிழ் எழுத்தாளர் சுஜாதா என்று அழைக்கப்படும் ரங்கராஜன், கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்திலுள்ள கணிப்பொறியியல் துறையின் முன்னாள் முதல்வரும், 1994ம் ஆண்டுக்கான டியூரிங் பரிசை வென்றவருமான ராஜ் ரெட்டி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, இந்தியாவின் முதல் பெண் இன்ஜினீயர் ஏ. லலிதா உள்ளிட்டோர் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பெருமைமிகு அண்ணா பல்கலைக்கழகத்தில்தான் (Anna University) தற்போது மொத்தமாக 232 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு அரசு அல்லது யுஜிசி (UGC) அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, BS, B.Ed, ME, M.Tech, MS, Ph.D, M.Phil, PGDM, CA, ICWA, M.Com ஆகிய பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
01.07.2023 அன்றைய தேதியின் படி, 24 வயதுக்கு கீழுள்ள நபர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் 7-வது ஊதியக் கமிஷன்(7th Pay Commission Scale) விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
எழுத்துத் தேர்வு, விளக்கத் தேர்வு, நேர்முகத்தேர்வு (Written Test, Presentation, Interview) மூலம் இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பல்கலைக்கழக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
பிறகு பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்பித் தர வேண்டும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட கால அவகாசம் ஆன்லைன் முறைக்கு 18.12.2023 அன்று வரையும், தபால் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு 22.12.2023 அன்று வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விளம்பரம் தொடர்பான விவரங்களை https://rcell.annauniv.edu/aurecruitment_new_cc/assets/001_RC_UCE_RC_2023.pdf என்ற இணையதள லிங்க்கில் தொடர்புகொண்டு அறியலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://rcell.annauniv.edu/aurecruitment_new_cc/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












