டிஎன்பிஎஸ்சி சார்பில் பகுப்பாய்வாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது தற்காலிகமாகத் தேர்வானோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
பல்வேறு பணிகளில் அடங்கிய இளநிலை பகுப்பாய்வாளர், இளநிலை ரசாயனர், ரசாயனர் மற்றும் தொல்லியல் ரசாயனர் பதவிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதிக்கீடு விதி அடிப்படையில் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிக அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 26ம் தேதியன்று சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.


Click it and Unblock the Notifications












