50,000 பேருக்கு வேலையளிக்கும் அமேசான் நிறுவனம்.! எதற்காகத் தெரியுமா?

இந்தியாவில் 50,000 பேருக்கு தற்காலிகமாக வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் நாடு முழுவதும் ஓர் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் ஆன்லைன் டெலிவரி சேவையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

50,000 பேருக்கு வேலையளிக்கும் அமேசான் நிறுவனம்.! எதற்காகத் தெரியுமா?

தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்த நிறுவனங்கள் மக்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும் என்பதற்காக தற்போது இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, அமேசான் நிறுவனம் இந்தியாவில் மட்டும் 0 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பளிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அமேசான் ஆன்லைன் வர்த்தகம்

அமேசான் ஆன்லைன் வர்த்தகம்

ஆன்லைன் வர்த்தகத்தின் ஜாம்பவானான அமேசான், கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தை தொடங்கியது. இந்த புதிய வளாகம், 9 புள்ளி 5 ஏக்கர் நிலப்பரப்பும் ஆயிரக்கணக்கான மில்லியன் டாலர்கள் முதலீடும் கொண்டதாகும். இதில், சுமார் 15 ஆயிரம் பேர் பணியாற்றும் வசதிகளுன் கட்டமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின.

60,000 மேற்பட்ட முழு நேரப் பணியாளர்கள்

60,000 மேற்பட்ட முழு நேரப் பணியாளர்கள்

2004-ஆம் ஆண்டு முதன்முதலில் இந்தியாவில் களமிறங்கிய அமேசான் நிறுவனம் ஹைதராபாத்திலிருந்துதான் தனது வேவையை தொடங்கியது. தற்போது, அந்நிறுவனத்தின் கீழ் இந்தியாவில் மட்டும் சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முழுநேர ஊழியர்கள் பணியாற்றி வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தத் தொழிலாளர்கள்

ஒப்பந்தத் தொழிலாளர்கள்

அதுமட்டுமின்றி, அமேசான் தனது சொந்த நாட்டை விட இந்தியாவில் தான் அதிக அளவு ஊழியர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர்த்து 1.55 லட்சம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அமேசானுக்காக இந்தியாவில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் வீழ்ந்த வர்த்தகம்

கொரோனாவால் வீழ்ந்த வர்த்தகம்

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனாவின் காரணமாக ஊரடங்கு அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த முழு ஊரடங்கின் காரணமாக போக்குவரத்து சேவை, உற்பத்தி என அனைத்துமே ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் சேவைகள் தொடங்கப்பட உள்ளன.

மீண்டும் தலைதூக்கும் ஆன்லைன் சேவை

மீண்டும் தலைதூக்கும் ஆன்லைன் சேவை

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் ஆன்லைன் டெலிவரி சேவையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது சேவையில் முழு வீச்சில் இறங்கியுள்ளன. சுமார், இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆன்லைன் டெலிவரி சேவை தொடங்கியுள்ளதால் பொதுமக்களும் அதிகமாக ஆர்டர் செய்யத் தொடங்கியுள்ளனர். எனவே டோர் டெலிவரி மற்றும் இதர சேவைகளுக்கு பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் அமேசான் நிறுவனம் அதிகமான ஆட்களை பணியில் அமர்த்த முடிவுசெய்துள்ளது.

50,000 தற்காலிக பணியாளர்கள்

50,000 தற்காலிக பணியாளர்கள்

அதன்படி, இந்தியாவில் 50,000 பேருக்கு தற்காலிகமாக வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியச் சந்தையில் அதிக முதலீடு செய்து வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்ப்பதில் மும்முரமாகச் செயல்படும் அமேசான் நிறுவனம், தற்போது, ஊரடங்கு காலத்தில் ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட போட்டி நிறுவனங்களை விட சிறந்த சேவை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் வேலை இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Amazon to hire 50000 temporary fulfilment and delivery roles in India
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X