All India Radio Recruitment 2022: 'ஆல் இந்திய ரேடியோ' சென்னை பிரிவில் பணி வாய்ப்பு...!

'ஆகாஷ்வாணி! செய்திகள் வாசிப்பது' என்று கனத்த மெளனத்தை உடைத்து கொண்டு ஒலிக்கும் குரலுடன் வானொலி செய்திகளை கேட்டவர்களின் நினைவில் இருந்து, அந்த காற்றின் மூலம் கேட்கப்பெற்ற ஓசை என்றென்றும் நீங்காது...!

ஒலி வாயிலாக, வரலாற்றில் புரட்டி போட்ட நிகழ்வுகளை கேட்ட தலைமுறையின் உணர்வு என்பது அளப்பரியது.

அகில இந்திய வானொலியில் வெப் எடிட்டர் பணி வாய்ப்பு...!

ஆனால், இன்றோ தொழில்நுட்ப புரட்சியால், ஒலி வாயிலாக நிகழ்வுகளை கேட்டும் இளம் தலைமுறை குறைவு...!

வரலாற்று பெயர் பெற்ற வானொலியின், மாநில செய்திப்பிரிவில் பகுதி நேர செய்தி ஆசிரியர், வெப் எடிட்டர் பணியிடங்களில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும்,தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : அகில இந்திய வானொலி (All India Radio)

மேலாண்மை : மத்திய அரசு

பதவிகள் விவரம்

• பகுதி நேர ஆசிரியர்(News Editors on casual basis)

• வெப் எடிட்டர் (Web Editor)

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.09.2022

கல்வி தகுதி

பகுதி நேர செய்தி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இதழியலில் பட்டம் அல்லது பட்டப்படிப்பு படித்த 55 வயதுக்கு உட்பட்ட சென்னையில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் மூன்றாண்டு கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழில் திறம்பட மொழி பெயர்ப்பு செய்யும் திறனும், செய்திகளை உடனுக்குடன் பதவிடும் திறனும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

பகுதி நேர வெப் எடிட்டர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இதழியலில் பட்டம் அல்லது பட்டப்படிப்பு பயின்ற 35 வயதுக்கு உட்பட்ட சென்னையில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் இரண்டு ஆண்டு கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆடியோ, வீடியோ எடிட்டிங்கில் திறன் பெற்றவர்களாகவும், சமூக வலைதள பக்கங்களுக்கான செய்திகளை வடிவமைப்பதில் திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதி, ஆர்வமுள்ளவர்கள் ரூ.354/- தேர்வு கட்டணத்துடன் விண்ணப்பங்களை...,

பிராந்திய செய்தி பிரிவு தலைவர்,

அகில இந்திய வானொலி,

எண்.4, காமராஜர் சாலை,

மயிலாப்பூர்,

சென்னை 600 004 என்ற முகவரிக்கு, வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணத்தில் விலக்கு அல்லது தளர்வு தொடர்பாக, அறிவிப்பை ஒரு முறை படித்து பார்க்கவும்.

முக்கியம் ப்ளீஸ் நோட் பண்ணுங்க...!
தேர்வு கட்டண ரசீதுடன், கல்வி தகுதி, பிறந்த தேதி, ஆதார் எண் ஆகிய விவரங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட வேண்டும்.

தேர்வு கட்டணங்களை www.onlinesbi.sbi/sbicollect/ என்ற இணையதளத்தில் New Casual Assignee Exam Fees என்ற பெயரில் செலுத்த வேண்டும்.

கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

பணி பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா? ஆங்கிலத்தில்...!

https://prasarbharati.gov.in/pbvacancies/

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited for the posts of News Editors on casual basis, Web Editor in the state news section of All India Radio known as 'All India Radio'.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X