ஏர் இந்தியாவில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள்

Posted By:

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பிற்க்கான அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவில் இன்ஜினியர் பணியிடத்தில் உதவிப்பணியாளர் பதவிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். ஏர் இந்தியாவில் 85 காலிப்பணியிடங்கள் நிரப்ப வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை தகுதியுடையோர் பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெறலாம்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் அஸிஸ்டெண்ட் சூப்பிரவைசர் பணிக்கான அறிவிப்பு

தகுதி:

ஏர் இந்தியாவில் அஸிஸ்டெண்ட் சூப்ரவைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது . 85 காலிப்பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது . ஏதேனும்
பட்டபடிப்பினை முடித்திருக்க வேண்டும். அத்துடன் கம்பியூட்டர் படிப்புகள் தொடர்பான டிப்ள்மோ ஒராண்டு படித்து முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினி தொடர்பான ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தகுதியுடையோர் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு விதிகளின்படி தளர்த்தப்படும் . விண்ணபிப்போர் ரூபாய் 1000 விண்ணப்ப கட்டணமாக Air India Enginnering service limited என்ற பெயரில் டிடி எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை ஏர் இண்டியா இணையத்தளமான http://www.airindia.in/careers.htm  ஏர் இந்தியா இணையத்தில் உள்ளபடி விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்கள் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
ALL INDIA ENGINEERING SERVICE LIMITED
NORTHERN REGION
Personnel Department
A320 Avionics complex
IGI Airport, Terminal-II
(Near New Custom house , New Delhi-110037)

ஏர் இந்தியாவில் நியமிக்கப்படும் பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு மர்றும் திறனறிவு தேர்வு நடத்தப்பட்டு தகுதியுடையோர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்,  விண்ணப்பங்களை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்பவும் , விண்ணப்பங்களை அஞசல் வழியில் அனுப்பலாம். 

சார்ந்த பதிவுகள்:

இந்திய பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு சுதந்திர பறவையாக நாட்டுக்காக பறக்க வாய்ப்பு 

வேலை ! வேலை! டிஆர்டிஒவில் அப்பிரண்டிஸ் பணிக்கான வாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் அச்சுத்துறையில் வேலைவாய்ப்பு

English summary
above article tell about Air India Notification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia