எட்டாவது படிச்சிரிக்கிறிங்களா அப்போ ஏர் இந்தியாவில் டிரைவர் வேலை வாய்ப்பு!

Posted By:

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவில் நிரப்பட இருக்கும் வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவில் மொத்தம் 75 டிரைவர்கள் மற்றும் யுட்டிலிட்டி கேண்டஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதியானவரிமிருந்து விண்ணப்பங்களை ஏர் இந்தியா எதிர்நோக்கி அறிவிக்கை வெளியிட்டுள்ளது .

ஏர் இந்தியாவில் டிரைவர் மற்றும் யுட்டிலிட்டி பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு

ஏர் இந்தியாவில் டிரைவர் பணிக்கு மொத்தம் 15 பேர் காலிப்பணியிடங்கள் நிரப்ப அழைக்கப்படுள்ளனர் . ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெற இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுவதில் ஐந்தாண்டுகள் அனுபவத்துடன் அதற்கான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

யுட்டிலிட்டி கேண்டஸ் பணிக்கு விண்ணப்பிக்க காலியிடங்கள் மொத்தம் 60 ஆகும். இப்பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அனுபவம்  பெற்றிருக்க வேண்டும் .

ஏர் இந்தியாவின் இப்பணிகளுக்கு மாதசம்பளமாக ரூபாய் 15,418 தொகை பெறலாம். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பானது 55க்குள் இருக்க வேண்டும் .

ஏர் இந்தியாவில் விண்ணப்பிக்க பொதுபிரிவினர் பிற்ப்படுத்தப்பட்டோர் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிட்டெடு என்ற பெயரில் டில்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுத்து அனுப்ப வேண்டும் . டிடியின் பின்புறம் விண்ணப்பத்தாரர் பெயர் , முகவரி தொலைபேசி எண் அனைத்தும்  குறிப்பிட்டு இருக்க வேண்டும். எஸ்சி ,எஸ்டி பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

ஏர் இந்தியாவில் தேர்வு செய்யப்படும் முறையானது டிரேடு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பம் :

ஏர் இந்தியாவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இப்பணிகளுக்கான விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து , தேவையான விவரங்களை பூர்த்தி செய்து முறையான சான்றிதழ் நகழ்களை இணைக்க வேண்டும் . அத்துடன் சுய அட்டடெஸ்டு செய்து அனுபவ சான்றிதழ் போன்றவற்றை நேர்முகதேர்வில் சமர்பிக்க வேண்டும்.

ஏர் இந்தியா தேர்வு நடைபெறும் நாள்: 30-10-2017 ஆகும்

ஏர் இந்தியாவுக்கான தேர்வு நடைபெறும் இடம் :
ஆஃபிஸ் ஆஃப் ஏர் இந்தியா, ஏர் இந்தியா இன்ஜினியரிங் காமளகஸ், ஹெச் ஆர் யுனிட், ஏபியு செண்டர், என்டிஏ நியூ டெக்னிக்கல் ஏரியா டம்டம் கொல்கட்டா 700052 ஆகும். மேலும் முழு விவரங்களை அறிந்து ஏர் இந்தியவின் அதிகாரபூர்வ இணைப்பை கொடுத்துள்ளோம் அவ்விணைப்பில் சென்று அறிந்துகொள்ளலாம் .

சார்ந்த பதிவுகள்:

நீங்க ரிட்டையார்டு பார்டியா உங்களுக்கு இந்திய இரயில்வேயில் வேலை !! 

டமாக்கா ஆஃபர் எஸ்எஸ்சியில் வேலைக்கு கூப்பிடராங்கோ , அப்ளை பண்ணிடுங்கோ !!  

ஆவின் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு !!!

English summary
here article tell about job notification of AirIndia

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia