ரிஷிகேஷில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள செவிலியர் அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 372 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு பி.எஸ்சி பயின்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 24ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்)
பணி : செவிலியர் அதிகாரி
மொத்த காலிப் பணியிடங்கள் : 372
வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : B.sc (Hons), B.sc. Nursing, B.sc (Post-Certificatio), Post Basic B.Sc Nursing உள்ளிட்ட ஏதேனும் ஓர் பட்டப்படிப்பை முடித்து செவிலியர் மற்றும் Midwife in State, India Nursing Council-ல் பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது அதே துறையில் டிப்ளமோ முடித்து பதிவு செய்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, தொழில் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது பிரிவினருக்கு - ரூ.3,000
- ஓபிசி பிரிவினருக்கு - ரூ.1,500
- எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500
- (கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.)
விண்ணப்பிக்கும் முறை : www.aiimsrishikesh.edu.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 24.12.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க் அல்லது www.aiimsrishikesh.edu.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












