எய்ம்ஸ் மருத்துமனையில் பேராசிரியர் பணி வாய்ப்பு

Written By: kaniselvam.p

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் உள்ள எய்ம்ஸ் மருத்துமனையில் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்

காலியிடம் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள்: 217

சம்பளவிகிதம்:
பேராசிரியர்-ரூ.37,400-67000
இணை பேராசிரியர்-37,400-67000
உதவி பேராசிரியர்-ரூ.15,600-39,100

கல்வித்தகுதி: காலியிடம் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் எய்ம்ஸ் விதிமுறைப்படி கல்வித்தகுதி, பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், பணி அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: எய்ம்ஸ் வளாகம், ரிஷிகேஷ்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.3000, இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்ஸி.,எஸ்டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் http://www.aiimsrishikesh.edu.in இந்த இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-04-2018 1.அதிகாரப்பூர்வ தளம்: அதிகாரப்பூர்வ தளத்தில் காலி பணியிடங்களுக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்: http://www.aiimsrishikesh.edu.in/

2. ஜாப்: ஜாப் பகுதியை கிளிக் செய்வதன் மூலம் காலி பணியிட விவரங்களை பெறலாம்.

3. அறிவிப்பு இணைப்பு: மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

English summary
AIIMS Rishikesh invites Online Applications for recruitment posts of Professor, Assistant Professor

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia