விண்ணப்பித்துவிட்டீர்களா..? எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 101 பணியிடங்கள் காலி!

Posted By: Kani

புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்) மருத்துவ மையத்தில் குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மருத்துவ உளவியலாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு குரூப் ஏ, பி பணியிடம் 

காலி பணியிடங்கள்: 101

வயது வரம்பு: 18-50-க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பணிக்கான வயது வரம்பு விவரங்களை இணையத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை: குரூப் ஏ பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். குரூப் பி பணிக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணம்: ஓபிசி பிரிவினருக்கு ரூ.500/-, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-

விண்ணப்பம் தொடங்கும் தேதி: 18-05-2018

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18-06-2018

மேலும் விவரங்களுக்கு எய்ம்ஸ் இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

English summary
Aiims invites application for various post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia