சென்னை விமானநிலையத்தில் தற்போது தற்காலிக பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ஏர் இந்தியா விமான நிலைய சேவை நிறுவனம் (ஏஐஏஎஸ்எல்) வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு aiasl.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
சென்னை சர்வதேச விமானநிலையமானது சென்னைக்கு 10 கிலோ மீட்டர் தெற்கே மீனம்பாக்கம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது நமது நாட்டில் மும்பை, டெல்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியமாக உள்ள சர்வதேச விமான நிலையமாகும். 2005-ம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகள் இந்நிலைய சென்னை சர்வதேச விமானநிலையம் மூலமாக பயணம் செய்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக அதிக போக்குவரத்துள்ள சரக்கு விமான நிலையமும் இதுவாகும். 1400 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 34 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் தொடக்ககாலத்தில் உருவாக்கப்பட்ட விமான நிலையங்களில் ஒன்றாகும். இது மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளதால் மீனம்பாக்கம் விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகின்றது. இங்கு முதல் விமானம் (புஷ்மோத்) 1932-ஆம் ஆண்டு தரை இறங்கியது. இரண்டாம் உலகப் போரின்போது ராணுவப் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 1952-ஆம் ஆண்டு உள்நாட்டு விமான வாரியம் இதந் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது. இது தற்போது சரக்கு போக்குவரத்து விமானங்கள் வந்து செல்லுமிடமாக உள்ளது. 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் 1985ஆம் ஆண்டு மீனம்பாக்கம் அருகில் திரிசூலத்தில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டது. 1989-ம் ஆண்டு புதிய பன்னாட்டு முனையகம் தொடங்கப்பட்டது. 2003-ம் ஆண்டு புதிய பன்னாட்டு புறப்பாடு முனையகம் செயல்படுத்தப்பட்டது.
இத்தகைய சென்னை விமானநிலையத்தில் தற்போது ரேம்ப் டிரைவர் 130, ஹேன்டிவுமன் 292 என மொத்தம் 422 இடங்கள் காலியாக அமைந்துள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு பணி ஒப்பந்த காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமானநிலைய பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: விமானநிலையத்தில் உள்ள டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்கவேண்டும். மேலும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். ஹேன்டிவுமன் பணிக்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்.
சென்னை விமானநிலைய பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 1.4.2024 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமானநிலைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 'வாக் இன்' தேர்வில் ஆர்வலர்கள் பங்கேற்கலாம்.
சென்னை விமானநிலைய பணியிடங்களுக்கு தேர்ச்சி முறை: 'வாக் இன்' முறையில் ஆட்கள் தேர்வு இந்தப் பணியிடங்களுக்கு நடைபெறும்.
தேர்வு தேதி: இந்தப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வு 2.5.2024-ம் தேதி காலை 9:00 மணி - 12:00 மணி வரை நடைபெறும்.
இடம்: இந்த ஆட்சேர்ப்புக்கான வாக் இன் முறை தேர்வு Office of the HRD Department, AI Unity Complex, Pallavaram Cantonment, Chennai - 600 043, Land Mark: Near Taj Catering என்ற முகவரியில் நடைபெறும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு aiasl.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












