தமிழக அரசிற்கு உட்பட்டு திருச்சியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 13
பணி மற்றும் காலிப் பணியிடம்:-
- ஓட்டுநர் : 04
- துணை மேலாளர் : 04
- மேலாளர் : 05
கல்வித் தகுதி :-
- ஓட்டுநர் : 8-வது தேர்ச்சி
- துணை மேலாளர் : எம்பிஏ, பிபிஏ
- மேலாளர் : எம்பிஏ, கால்நடை மருத்துவத் துறையில் இளங்கலைப் பட்டம்
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம்:-
- ஓட்டுநர் : ரூ. 5200 முதல் ரூ. 20,200 வரையில்
- துணை மேலாளர் : ரூ. 9300 முதல் ரூ.34,800 வரையில்
- மேலாளர் : ரூ.9,300 முதல் 39,100 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.aavinmilk.com/hrtry050219.html
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The General Manager, Tiruchirappalli District Co-operative Milk Producers' Union Limited, Pudukkottai Road, Kottapattu Trichy - 620 023.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.02.2019 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:-
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250
- பிற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவதினைப் பெறவும் http://www.aavinmilk.com/hrtryapp050219.pdf அல்லது www.aavinmilk.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.