தமிழக அரசிற்கு உட்பட்ட காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியல் மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்), காஞ்சிபுரம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : மேலாளர் (பொறியியல்)
காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ருமெண்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.37,700 மாதம்
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, K.T.D.C.M.P. Union Limited, 55, Guruvappa Street, Ayanavaram, Chennai - 600023.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.250.
இதனை "The General Manager, K.T.D.C.M.P.U. Ltd", என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வரையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 2019 மார்ச் 04
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://aavinmilk.com/hrkt130219.html என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












