இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள Junior Executive பணியிடங்களை நிரப்பிடுவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 355 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடக்ளுக்கு ரூ.1.40 லட்சம் வரையில் ஊயிம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
- Junior Executive (Air Traffic Control) - 264
- Junior Executive (Airport Operations) - 83
- Junior Executive (Technical) - 08
கல்வித் தகுதி : மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் பி.இ, அல்லது பி.டெடக், இயற்பியல், பி.எஸ்சி கணிதம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.aai.aero என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி : 15.12.2020
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 14.01.2021
தேர்வு முறை : ஆன்லைன் வழியில் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் ஓட்டுநர் சோதனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1,000
- எஸ்.சி, எஸ்.டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.170
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழில்பழநுனர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.aai.aero அல்லது மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.