நீட்தேர்வு போராட்டம் ஏழரைநாள் கடக்கின்றது ஏழரை இனி யாருக்கு !!

Posted By:

ஏழாவதுநாளாக நீட் தேர்வுக்கு எதிரான எதிர்ப்பு போராட்டத்தால் மத்திய மாநிலங்களுக்கு தொடர்ந்து ஏழரை நாளாக பிடித்து ஆட்டுகிறது ஆனால் அரசு அமைதிகாப்பது இன்னும் அடுத்தடுத்த சிக்கல்களை மத்திய மாநில அரசுகள் சந்திக்க நேரிடும் .

நீட்தேர்வு போராட்டம் ஏழாவது நாளை கடந்து செல்கின்றது

ஒரேகல்வி ஒரு இந்தியா:

ஒரே கல்வி ஒரே இந்தியா என்ற ஒன்றுப்பட்ட எண்ணத்துடன் தமிழகத்தில்ல் முதன்முறையாக திண்டிவனம் அருகேவுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை சபரிமலா தன் வேலையை இராஜினாமா செய்து போராட்டத்தில் இறங்கியுள்ளார் . ஒருகல்வி ஒரு தேசம் என்று தன் தேச நலனை கருத்தில் கொண்டு தன் மகனுடன் போராட்டத்தில் இறங்கியுள்ளார் . உண்மையில் இது எளிதான காரியமன்று எல்லோராலும் செய்ய கூடிய காரியம் இல்லையென்றாலும் இந்த தேசத்து மாணவர்களுக்கு முன்னுதராண ஆசிரியராக இருந்து சிறப்பு செய்துள்ளார் .

நீட் தேர்வு குறித்து மதுரையில் மாணவர்கள் :

மதுரையில் மாணவர்கள் தமிழன்னை சிலைமுன்பு மாணவர்கள் போராட்டம் . மாணவர்கள் சிறை வைக்கப்பட்டனர் . தமிழன்னை சிலைமுன்பு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு காணப்பட்டது . சிலைமுன்பு போராடியவர்களை கைது செய்யப்பட்டனர் . நீதிமன்றகாவல் சிறையில் அடைக்கப்பட்டனர் .

அரசுகல்லுரிகள் விடுமுறை :

சென்னை அரசுகல்லுரி நீட்தேர்வு எதிர்ப்பு போராட்டத்தால் மாணவர்கள் பெருமளவு கூடினார்கள் அதலால் மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தால் சென்னை அரசு கல்லுரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . அத்துடன் கோவை மாவட்டத்திற்கும் விடுமுறையளிக்கப்பட்டுள்ளது . மாணவர்கள் போராட்ட எண்ணிகையை குறைக்கவே இதனை செங்கல்பட்டு , சட்டகல்லுரி மாணவர்களுக்கும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது . மாணவர்களின் போராட்டத்தின் தீவிரத்தை குறைக்கவே இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது .

இன்னும் நீட்தேர்வு இந்தியாவின் ஆட்சி பீடத்திற்கே அரும் சவாலாக இருக்கின்றது என்பது உணையாகும் . நீட்தேர்வுக்கு செவிசாய்க்கவில்லையெனில் இன்னும் அது என்னவாகும் என்பதை மத்திய மாநில அரசுகள் சிந்தித்து செயலாற்ற வேண்டும் . 

சார்ந்த பதிவுகள்: 

நீட் தேர்வுக்கு எதிராக தொடரும் ஆறாவது நாள் போராட்டம் !! 

நீட் தேர்வு எதிர்த்து அதிகரித்து வரும் போராட்டங்கள் ,,! 

சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் சிறப்பு கற்பிக்கும் திறன் 

English summary
here article tell about neet protest of 7th day

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia