எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் நர்சிங் படித்தவர்களுக்கு 1411 வேலைவாய்ப்புகள்.. விண்ணப்பிக்க ரெடியா?

Posted By:

சென்னை ; அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. புதுடெல்லியை தலைமை இடமாகக் கொண்டு இந்தியாவின் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மைய கிளைகள் செயல்படுகின்றன. தற்போது இதன் கிளைகளில் ஸ்டாப் நர்ஸ் மற்றும் அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டென்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் ரிஷிகேஷ் எய்ம்ஸ் கிளையில் 1154 பணியிடங்கள், புது டெல்லியில் 257 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது.

ரிஷிகேஷ் கிளையில் ஸ்டாப் நர்ஸ் (கிரேடு-2) பணிக்கு 1126 பணியிடங்களும், அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டென்ட் (குரூப்-ஏ) பணிக்கு 28 பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.

எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் நர்சிங் படித்தவர்களுக்கு 1411 வேலைவாய்ப்புகள்.. விண்ணப்பிக்க ரெடியா?

வயது வரம்பு -

ஸ்டாப் நர்ஸ் பணிகளுக்கு 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டென்ட் பணிக்கு 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 31.07.2017ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்க்பபடுகிறது.

கல்வித் தகுதி -

பிஎஸ்சி நர்சிங் 4 வருட பட்டப்படிப்பு படித்தவர்கள் அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டென்ட் பணிக்கும், 2 வருட சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் ஸ்டாப் நர்ஸ் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை -

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் -

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ. 1000 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை -

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31.07.2017ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

மேலும் விபரங்களை அறிந்து கொள்ள www.aiimsrishikesh.edu.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

புது டெல்லியில் 257 பணிகள்

புது டெல்லி எய்ம்ஸ் கிளையில் நர்சிங் ஆபிசர் பணிக்கு 257 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்ப அவகாச காலத்தின் இறுதி நாளை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

பி.எஸ்.சி. நர்சிங் படித்து, நர்ஸ் மற்றும் நர்ஸ்-மிட்வைப் கவுன்சிலில் பதிவு செய்து வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். நர்சிங்-மிட்வைபரி டிப்ளமோ படிப்புடன் குறிப்பிட்ட அனுபவம் இருப்பவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 14.07.2017ந் தேதியாகும்.

இதற்கான எழுத்துத் தேர்வு 11.09.2017ந் தேதி நடத்தப்பட உள்ளது. மேலும் விரபங்கள் அறிந்து கொள்ள www.aiimsexams.org என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

English summary
Above mentioned article about aiims new delhi job and aiims rishikesh job details.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia