தமிழகம் முழுவதும் ஜூலை 22ல் நடக்கும் இந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில், 300க்கும் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.
எப்போது முகாம்...!
சென்னையில், மாநில கல்லுாரியில் காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.முகாமில் பங்கு பெறும் முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில், காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை பூர்த்தி செய்யும் முனைப்பில் உள்ளன.

8 முதல் பி.இ., வரை
இந்த முகாமில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, தையல் கற்றவர்கள் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் பங்கேற்கலாம்.
ப்ளீஸ் மறக்காதீங்க...!
பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் கயவிவரக் குறிப்புடன் (Bio-Data) ஆகியவற்றை நேர்காணலின்போது, உடன் எடுத்து செல்ல வேண்டும்.
முகாமில் 300க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி ஆணை வழங்கவுள்ளனர்.
வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.
இந்த முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
பணியிடங்கள் எவ்வளவு?
ஜூலை 22ல் நடைபெறும் மெகா தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தங்களிடம் காலியாக உள்ள 30 ஆயிரம் இடங்களுக்கு தகுதியான நபர்களை நேர்காணலின்போது தேர்வு செய்யப்படவுள்ளனர்.
வேலை வாய்ப்பு சார்ந்த சந்தேகங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இடம்பெற்றுள்ள மின்னஞ்சல் அல்லது தொலைபேசி முகவரி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/Home/index என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications












