12-ஆம் வகுப்பு பயிலும் 11,268 மாணவர்களுக்கு அக மதிப்பெண்ணாக 0 வழங்கியது குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த கல்வி ஆண்டில் 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 11ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அகமதிப்பீடாக பூஜ்ஜியம் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. மாதாந்திரத் தேர்வு, பருவத் தேர்வு ஆகியவற்றில் சிறந்த ஏதேனும் மூன்று தேர்வுகளில் பெற்ற சராசரி மதிப்பெண்ணை 5 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டு இன்டர்னல் எனும் அகமதிப்பெண்ணாக வழங்க வேண்டும். அதன் பின், 85 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள வருகைப் பதிவுக்கு 3 மதிப்பெண்களும், 80 முதல் 85 சதவிகி வருகைப் பதிவுக்கு 2 மதிப்பெண்களும், 75 முதல் 80 சதவிகித வருகைப் பதிவுக்கு ஒரு மதிப்பெண்ணும் வழங்க வேண்டும்.
இவற்றில், 75 சதவிகிதம் வருகைப் பதிவு கொண்டுள்ள மாணவர்கள் மட்டுமே பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில், 2017-2018-ஆம் கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு எழுதிய 11-ஆம் வகுப்பு மாணவர்களில் 11 ஆயிரத்து 768 பேருக்கு அகமதிப்பெண்ணாக பூஜ்ஜிம் வழங்கப்பட்டுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் மொத்த மதிப்பெண்கள் குறைந்து, தேர்ச்சி பெற முடியாத சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒரு மதிப்பெண் கூட பெறாமல், குறைந்த பட்ச வருகை கூட இல்லாத மாணவர்கள் பொது தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டது குறித்து விளக்கமளிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications












