காமட்-கே தேர்வு என்றால் என்ன?

Posted By:

பெங்களூர் : காமட்-கே தேர்வு என்பது கர்நாடகாவிலுள்ள தனியார் தொழிற்கல்வி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வாகும். இந்தத் தேர்வு கர்நாடக மருத்துவக் கூட்டமைப்பு மூலமாக கர்நாடகா மாநிலத்தில் நடத்தப்படுகிறது. மருத்துவம், பிடிஎஸ், மருத்துவத் துறையைச் சார்ந்த மற்றப் படிப்புகள் மற்றும் பொறியியல் துறையைச் சார்ந்த அனைத்து வகையான கோர்ஸ்களிலும் சேர்ந்து படிப்பதற்காக இந்தத் தேர்வு தேசிய அளவில் கர்நாடகா மாநில அரசால் நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு மாணவர்களுடைய கல்வித் தகுதியை சோதித்து அறிவதற்காக நடத்தப்படும் ஒரு வெளிப்படையான தேர்வாகும். இந்தத் தேர்விற்கான பாடத்திட்டங்கள் முன்னதாகவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டங்களாகும்.

காமட்-கே தேர்வு என்றால் என்ன?

14 மருத்துவக்கல்லூரி, 25 பல்மருத்துவக்கல்லூரி மற்றும 150க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இருக்கக் கூடிய கிட்டத்தட்ட 20,000 காலிஇடங்களை நிரப்புவதற்காக இந்தத காமட்-கே தேர்வு நடத்தப்படுகிறது. இது இளம்நிலைப் படிப்பில் முதலாம் ஆண்டு சேருவதற்காக நடத்தப்படுகிறது.

கர்நாடகா மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் பல்மருத்துவக் கல்லூரிகளில் இளம்நிலைப் படிப்பில் சேர விருப்பமும் தகுதியும் உள்ள மாணவர்கள் இந்த காமட்-கே தேர்விற்கு விண்ணப்பிக்கலாம. இது 2017- 2018ம் ஆண்டிற்காக நடத்தப்படும் தேர்வாகும்.

தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப் பெண்களைப் பொறுத்து மெரிட் லிஸ்ட் வெளியிடப்படும்.

நடப்பு ஆண்டில் காமட்-கே தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் மூலம் நடப்பு ஆண்டு மட்டுமே கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம்.

காமட்-கே தேர்விற்கான தகுதிகள் என்னென்ன என்று பார்ப்போம்.

கர்நாடகா மருத்துவக் கூட்டமைப்பு மருத்துவம், பல்மருத்துவம் மற்றும் பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரிகளில் இளம் நிலை முதலாம் ஆண்டு சேருவதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகும். இந்தத் தேர்வு பெங்களூரில் நடத்தப்படுகிறது. இது கர்நாடக மாநிலத்திலுள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் துறைச் சார்ந்த தனியார் கல்லூரிகளில் சேருவதற்காக தேசிய அளவில் நடத்தப்டும் தேர்வாகும்.

காமட்-கே தேர்விற்காக விண்ணப்படிவம் அலுவலக இணையதளத்தில் மார்ச் 12ம் தேதி 2017 முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நத் தேர்வு மே மாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி வரம்பு :

எம்பிபிஎஸ்/பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தகுதி :

மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின் படி எம்பிபிஎஸ்/பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கு 2nd பியூசி அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது இதற்கு இணையான மாநில அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பள்ளி இறுதிப் படிப்பில் கடைசி இரண்டு வருடங்கள் இயற்பில், வேதியியல், மற்றும் உயிரியல் பாடங்களைக் கட்டாயமாகப் படித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் ஒரு பாடமாக எடுத்து பயின்றிருக்க வேண்டும்
.
விண்ணப்பதாரர்கள் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும். (கர்நாடகா மாநிலத்திலுள்ள எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர்கள் 40% மார்க் பெற்றிருக்க வேண்டும்) மேலும் பொது நுழைவுத் தேர்விலும் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் 50%க்கும் குறையாமல் மார்க் பெற்றிருக்க வேண்டும். (கர்நாடகா மாநிலத்திலுள்ள எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர்கள் 40% மார்க் பெற்றிருக்க வேண்டும்)

இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்துடன் ஆங்கிலத் தேர்விலும் 50%க்கும் குறையாமல் மார்க் பெற்றிருக்க வேண்டும். (கர்நாடகா மாநிலத்திலுள்ள எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர்கள் 40% மார்க் பெற்றிருக்க வேண்டும்) விண்ணப்பதாரர்களுக்கு 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் 2016 டிசம்பர் 31ம் தேதிக்குள்.

மற்றவர்களால் தேர்வு எழுத இயலாது.

பிஇ/ எஞ்னியரிங்கில் சேருவதற்கான தகுதி :

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் படி எஞ்னியரிங் படிப்பதற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழ்க் காணும் கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
2nd பியூசி அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது இதற்கு இணையான மாநில அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பள்ளி இறுதிப் படிப்பில் கடைசி இரண்டு வருடங்கள் இயற்பில், வேதியியல், மற்றும் கணித பாடங்களைக் கட்டாயமாகப் படித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் ஒரு பாடமாக எடுத்து பயின்றிருக்க வேண்டும்.

பொதுப்பட்டியலைச் சேர்ந்த மாணவர்கள் இயற்பில், வேதியியல், மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 45% மார்க் பெற்றிருக்க வேண்டும். (கர்நாடகா மாநிலத்திலுள்ள எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர்கள் 40% மார்க் பெற்றிருக்க வேண்டும்) இயற்பியல் மற்றும் கணிதப் பாடத்தினை கட்டாயப் பாடமாக எடுத்து பயின்றிருக்க வேண்டும். அத்துடன் வேதியியல் அல்லது பயோடெக்னாலஜி அல்லது உயிரியல் பாடத்தினை விருப்பப் பாடமாக எடுத்து பயின்றிருக்க வேண்டும்.

பி.ஆர்க்/ கட்டிடக்கலைத்துறையில் சேருவதற்கான தகுதி :

பி.ஆர்க்/ கட்டிடக்கலைத்துறையில் சேருவதற்கான தகுதியைப் பற்றி அறிந்து கொள்ளுவேம்.

2nd பியூசி அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது இதற்கு இணையான தேர்ச்சி அதில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து பயின்றிருக்க வேண்டும். அல்லது பத்தாம் வகுப்பு மற்றும் அத்துடன் 3 ஆண்டு டிப்ளமோ கோர்ஸ்யை முடித்திருக்க வேண்டும். அது மாநில மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயின்றதாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 50%க்கும் குறையாமல் மார்க் பெற்றிருக்க வேண்டும். (கர்நாடகா மாநிலத்திலுள்ள எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர்கள் 45% மார்க் பெற்றிருக்க வேண்டும்)

கட்டிடக்கலை கவுன்சில் நடத்தும் கட்டிக்கலை தேசிய திறனறிவு தேர்வில் (NATA) 200 மதிப்பெண்ணிற்கு 80 மதிப்பெண் கட்டாயம் அனைத்து பிரிவினரும் பெற்றிருக்க வேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

எக்சிகியூட்டிவ் செக்ரட்ரி, காமட்-கே,
நம்பர் 132, இரண்டாவது மாடி, 11வது மெயின் ரோடு, 17வது குறுக்கு, மல்லேஸ்வரம், பெங்களூர் - 560055.

காமட்-கே தேர்வில் விண்ணப்பதாரர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

நுழைவுத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இறுதி மெரிட் மற்றும் ரேங்க் பட்டியல் தயார் செய்யப்படும்.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் காமட்-கே நுழைவுத் தேர்வில் இயற்பியல், வேதியில், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு பகுதிகளிலும் 50%க்கும் குறையாமல் மார்க் எடுக்க வேண்டும். (கர்நாடகா மாநிலத்திலுள்ள எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர்கள் 40% மார்க் பெற்றிருக்க வேண்டும்)

English summary
Candidates who are interested and eligible for admission in under graduate courses in private medical and dental colleges of Karnataka can apply for the COMEDK UGET .

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia