விஐடிஎம்இஇ நுழைவுத் தேர்வு தேதி விஐடி பல்கலைக்கழகம் அறிவிப்பு

Posted By:

புதுடெல்லி: வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(விஐடி) பல்கலைக்கழகத்தின் விஐடிஎம்இஇ நுழைவுத் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விஐடி பல்கலைக்கழகத்தில் எம்.டெக், எம்சிஏ படிப்பில் சேர்வதற்கு ஆண்டுதோறும் விஐடிஎம்இஇ நுழைவுத் தேர்வை விஐடி நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வுத் தேதிகளை இப்போது விஐடி அறிவித்துள்ளது. தேர்வுகள் ஜூன் 4, 5-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

விஐடிஎம்இஇ நுழைவுத் தேர்வு தேதி விஐடி பல்கலைக்கழகம் அறிவிப்பு

எம்.டெக், எம்சிஏ படிப்புகளுக்கு பல்வேறு பிரிவுகளில் இந்தத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இந்தத் தேர்வுகளுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும். அவர்களது இமெயில் முகவரி, செல்போன் நம்பர் ஆகியவற்றைக் கொடுத்து விண்ணப்பிக்கவேண்டும். கட்டணமாக ரூ.950 செலுத்தவேண்டும். இந்தத் தேர்வு கம்ப்யூட்டர் சார்ந்த தேர்வாக இருக்கும். 2 மணி நேரம் தேர்வு நடைபெறும். 100 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கேட்கப்படும்.

பெங்களூர், போபால், சென்னை, சண்டீகர், கோவை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மதுரை, நாக்பூர், புதுடெல்லி, பாட்னா, புனே, வேலூர், விஜயவாடா நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 16 கடைசி நாளாகும்.

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க http://vtop.vit.ac.in/VITMEE/ என்ற இணையதள லிங்க்கில் கிளிக் செய்யவேண்டும்.

English summary
Vellore Institute of Technology University, Vellore has announced the entrance exam dates for VIT Master's Entrance Examination (VITMEE). VITMEE is held by VIT University for admissions into M.Tech in various programmes and MCA programmes for the academic session 2016. The exams for the same is scheduled to be held on June 4 and June 5, 2016. How to apply for VITMEE 2016 Candidates can apply online using their email address and mobile number. Fill up the application forms. Application fee of Rs 950 must be paid online using net banking or any credit/ debit card. VITMEE 2016 Examination Pattern VITMEE is a online or computer based exam. Duration of exam is 2 hours The total number of questions will be 100 for a total of 100 marks No negative marking.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia