விஏஓ தேர்வு தேதி பிப்ரவரி 28-க்கு மாற்றம்

Posted By:

சென்னை: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு பிப்ரவரி 14-க்குப் பதிலாக வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான காலியிடங்கள் தற்போது நேரடியாக நியமனம் செய்யப்படுகிறது. இந்த நேரடி நியமனத்துக்கு விண்ணப்பங்களை அனுப்புமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் அறிவித்தது.

விஏஓ தேர்வு தேதி பிப்ரவரி 28-க்கு மாற்றம்

அதற்கான இணையவழி விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்காக கடைசி தேதி டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதியும் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்தத் தேர்வு தேதி பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia