ராணுவத்தில் இணைந்து நாட்டுக்குச் சேவை செய்ய விரும்புபவர்களுக்காக நல்லதொரு வாய்ப்பு வந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள துணை ராணுவப்படைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளோர் ராணுவத்தில் சேர விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு upsc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்தியத் துணை ராணுவப் படைகள் (Paramilitary forces of India) என்பது இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உள்நாட்டுப் பாதுகாப்புப் படைப் பிரிவுகள் ஆகும். இப்படைகள் உள்நாட்டு பாதுகாப்புப் பணிகள் செய்வதுடன் இந்தியாவின் பன்னாட்டு எல்லைகளையும் மற்றும் பன்னாட்டு கடல் எல்லைகளையும் கண்கானித்து காக்கிறது.நாட்டின் துணை ராணுவப் படைகளாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), இந்திய - திபெத் எல்லைக் காவல்படை - (ITBP), மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (CISF), சிறப்பு எல்லைப்புறப் படை - (SFF), விரைவு அதிரடிப் படை (RAF), உறுதிகொண்ட செயலுக்கான அதிரடிப்படை பட்டாலியன், ரயில்வே பாதுகாப்புப் படை - (RPF), சசஸ்திர சீமா பால் பலம் (SSB),

தேசிய பாதுகாப்புப் படை - (என். எஸ். ஜி), சிறப்பு எல்லைப்புறப் படை-(எஸ் எஸ் எப்), அசாம் ரைப்பிள்ஸ்(AR), ராஷ்டிரிய ரைபிள்ஸ் ஆகிய படைகள் உள்ளன.
நாடு முழுவதும் உள்ள எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எப்) 186 பணியிடங்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) 120, மத்திய தொழில் பாதுகாப்பு (சி.ஐ.எஸ்.எப்) 100, இந்தோ - திபெத் எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி) 58, சகஸ்த்ர சீமா பால்(எஸ்.எஸ்.பி) 42 என மொத்தம் 506 பணியிடங்கள் காலியாக உள்ளன.
துணை ராணுவப் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை ஆர்வலர்கள் முடித்திருக்க வேண்டும்.
துணை ராணுவப் பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய1.8.2024 அடிப்படையில் 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
துணை ராணுவப் பணியிடங்களுக்கான தேர்ச்சி முறை: இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: துணை ராணுவப் பணியிடங்களுக்கு சென்னை, மதுரை நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: துணை ராணுவப் பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.
விண்ணப்பக்கட்டணம்: துணை ராணுவப் பணியிடங்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ. 200 செலுத்தவேண்டும். பெண்கள் / எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினர் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இல்லை.
கடைசிநாள்: இந்தப் பணிக்கான விண்ணப்பங்களை வரும் 14.5.2024-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு upsc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












