மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு கடந்த மாதங்களில் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெற்றது.
2019 ஆம் ஆண்டுக்கான இந்த தேர்வில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வு முடிந்துவிட்ட நிலையில், இரண்டாம் கட்டமான முதன்மைத் தேர்வு கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களின் வரிசை எண், பெயர்களுடன் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த நேர்முகத் தேர்வானது 2019 பிப்ரவரி 4 ஆம் தேதியன்று தொடங்கி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் www.upsc.gov.in, www.upsconline.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களிலிருந்து 2019 ஜனவரி 8 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications

