கொரோனா ஊரடங்கின் காரணமாக மே 31-ஆம் தேதியன்று நடைபெறவிருந்த சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வை ஒத்திவைத்து யுபிஎஸசி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2020- 21-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்ஸ் முதல்நிலைத் தேர்வு வருகின்ற மே 31ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் இத்தேர்வினை ஒத்திவைப்பதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) அறிவித்துள்ளது.
மேலும் கொரோனாவின் தாக்கம் குறையும் பட்சத்தில் இத்தேர்வாணது மே 20-க்குள் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, அரவிந்த் சக்சேனா தலைமையில் யுபிஎஸ்சி ஆணையத்தின் கூட்டம் திங்களன்று (இன்று) நடைபெற்றது.இதில், மூத்த அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட அலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசுத் துறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












