சிவில் சர்வீஸ் தேர்வு மொபைல்சாதனங்கள் தடை மற்றும் தேர்வு நேர ஆலோசனைகள்

Posted By:

"தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவும் இல்லை"

வரும் 18 ஆம் தேதி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முதன் நிலை தேர்வானது நடைபெறவிருகின்றன. மாவட்ட ஆட்சித் தலைவராகும் வாய்ப்புக்கு தயாராகிவீட்டிர்கள் என்று நம்பிகின்றோம் . மாவட்ட ஆட்சியாளர் கனவு கொண்ட நீங்கள் செய்ய வேண்டிய தேர்வு நேர ஆலோசனைகள்

 

தேர்வு நேர ஆலோசனைகள் வருங்கால ஐஏஎஸ்களுக்கு

நீங்கள் இதுவரை படித்தது உங்களுக்கு போதுமானது மீண்டும் புதியவற்றை படிக்க வேண்டாம். ரிவைசிங் மட்டுமே செய்யவும். மனது மற்றும் உடல் இரண்டையும் சமநிலையில் வைக்கவும். மனது ஆரோக்கியமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும் . ஆக கூல் ஆக இருங்க, எது வரை படித்தீர்களோ அதுவரை போதும் . படிக்காததை எண்ணி வருந்த வேண்டாம் . எதுவானாலும் அமைதியாக எதிர்கொள்ளுங்கள் .

 

ஓய்வு :

நல்ல ஓய்வு கொடுங்கள் உடல் மனது இரண்டுக்கும் நல்ல ஓய்வு கொடுங்கள் .உணவில் அக்கறை வேண்டும் மேலும் தட்பவெப்ப நிலைக்கேற்ப செயல்படுங்கள் வெற்றி நிச்சயம். நேர்மறை சிந்தனையுடன் இருங்க அதுவே சாலசிறந்தது. உறக்கம் என்பது மிக முக்கியம் தேர்வு நேரத்தில் உறங்க வேண்டும் உங்களுக்கொரு டிப்ஸ் தேர்வுக்கான இந்த ஒருவார காலத்தில் உங்கள் சுறுசுறுப்பை அதிகப்படுத்த இரவு உறங்கும் முன் அமர்ந்த நிலையில் அரை மணி நேரம் உறங்கி பின் படுக்கவும் காலை எழும் போது புத்துணர்ச்சி பொங்கும். சன்னல் கதவை திறந்து வைக்கவும் காற்றோற்றத்துடன் அரைமணி நேரம் அமர்ந்து உறங்கவும் இதனை தொடர்ந்து பயிற்சி செய்தால் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் உறங்கினால் போதுமானது .

உணவு :

நீங்கள் வாழும் தட்ப வெப்ப நிலையை மனதில் கொண்டு உணவு உட்கொள்ளுங்கள் . ஆரோக்கியமா உடலை வைக்கவும் உண்ணும் உனவில் சுகாதாரத்துடன் இருந்தால் போதுமானது ஆகும் . அறை மணி நேரம் காலாற நடந்து வாருங்கள் இயற்கை காற்றை சுவாசித்து எண்ணங்களை ஒருங்கிணைத்து தேர்வு நெருக்கடியை ஒதுக்கி வையுங்கள் . அதிக எண்ணை பண்டம் அதிக உணவு உண்ண வேண்டாம் என்றெல்லாம் அறிவுரை தரமாட்டேன் ஆனால் ஒன்று நன்கு பசித்தப்பின் உண்ணவும், உணவு உட்கொள்ளும் போது மென்று முழுங்கவும் மேலும் பேசுவதை விடுத்து வாய்மூடிய நிலையில் மென்று முழுங்கவும் அப்பொழுதுதான் உணவு எளிதில் ஜீரணிக்கும் . 

தேர்வுக்கு தயாராதல் :

தேர்வுக்கு தயாராகுங்கள் இரண்டு கருப்பு பால்பாயிண்ட் பேனா மற்றும் தேர்வு எழுதும் இடம் பற்றிய தெளிவு அத்துடன் தேர்வுக்கு தேவையான உபகரணங்கள் எடுத்து செல்லவும் . மேலும் மொபைல் போன் எடுத்து செல்ல யூபிஎஸ்சி தடை விதித்துள்ளது ஆகையால் விலையுயர்ந்த கைபேசி சாதனங்களை எடுத்து செல்வதை தவிர்க்கவும் . அதிக வெய்யிலாக இருந்தால் காட்டன் உடை அனிந்து தேர்வு எழுத செல்லுங்கள் வெய்யில் உருத்தாது . ஹால் டிக்கெட் நகல் எடுத்து வையுங்கள் .

தேர்வு மையம் மற்றும் தடை :

தேர்வு மையம் எங்கிருக்கின்றது என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள். தேர்வு மையத்திற்கு அரைமணி நேரம் முன் செல்லுங்கள். தேர்வு மையத்திற்கு கைபேசி போன்ற எந்தவொரு மின்சாதனங்களையும் எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளது யூபிஎஸ்சி, மீறி எடுத்து சென்றால் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. எனவே தேர்வு எழுதுவோர் கவனமாக இருக்க வேண்டும். தேர்வு மையத்தில் உங்கள் அறை எண் பரிசோதித்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் மேலும் குடிக்க தண்ணீர் கைவசம் வைத்து கொள்ளுங்கள். உணவு முடிந்த அளவு எடுத்து செல்லவும் அல்லது அருகாமையில் ஏதேனும் உணவகம் இருக்கும் இடம் அறிந்து வைத்துகொள்ளுங்கள் தேர்வு எழுதும் முன் தேர்வு மையம் சென்று பார்த்து வருவது நல்லது ஆகும் . 

தேர்வு நாள் :

வழக்கத்தைவிட முன் எழவும் தேர்வு நாளுக்கு முன் சரியான நேரத்தில் உறங்க செல்லவும் . பேருந்து அல்லது உங்கள் நண்பர் வாகனம் எடுத்து செல்லுவீர்களோ அல்லது நண்பருடன் பயணிப்பீரோ எதுவானாலும் சரியான நேரத்தில் தொடங்கவும் .
"மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்கையில் ஏற்றுகொண்டால் யாரும் உயர்ந்த நிலையை அடையலாம் ".

English summary
here article mentioned about mobile phone banning on UPSC exams and also have suggestions for exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia