மத்திய அரசின் இளநிலை டிசைனிங் பட்டப்படிப்பில் சேர ‘யூசீட்’ தேர்வு அறிவிப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் இளநிலை டிசைனிங் பட்டப்படிப்பில் சேர அண்டர் கிராட்ஜூவேட் காமன் எண்ட்ரன்ஸ் எக்ஸாம் பார் டிசைன் (யூசீட்) தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மும்பை ஐ.ஐ.டி., கவுகாத்தி ஐ.ஐ.டி., ஐதராபாத் ஐ.ஐ.டி மற்றும் ஜபல்பூர் ஐ.ஐ.ஐ.டி.டி.எம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இளநிலை டிசைனிங் பட்டப்படிப்பில் சேர அண்டர் கிராட்ஜூவேட் காமன் எண்ட்ரன்ஸ் எக்ஸாம் பார் டிசைன் (யூசீட்) என்னும் நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம். தற்போது, அடுத்த கல்வியாண்டிற்கான இந்த கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு துவங்கியுள்ளது.

மத்திய அரசின் இளநிலை டிசைனிங் பட்டப்படிப்பில் சேர ‘யூசீட்’ தேர்வு அறிவிப்பு!

படிப்பு : பாச்சுளர் ஆப் டிசைன் (பி.டெஸ்.,)

கல்வித் தகுதிகள் :

  • 12ம் வகுப்புத் தேர்வினை 2018ம் ஆண்டில் எழுதியவராக அல்லது 2019ம் ஆண்டில் எழுதப்போரவராக இருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 3 ஆண்டுகளுக்கான தொழிற்கல்வி படிப்பிற்கான டிப்ளமா பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • அக்டோபர் 1, 1994 அல்லது அதற்குப் பின் பிறந்தவராக இருக்க வேண்டும்.
  • எஸ்.சி., எஸ்.டி., அல்லது மாற்றுத்திறனாளி மாணவர்கள் அக்டோபர் 1, 1989 அல்லது அதற்குப் பின் பிறந்திருந்தால் இத்தேர்வினை எழுத அனுமதி உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

யுசீட் தேர்விற்கான அதிகாரப்பூர்வ இணையத்தளம் www.uceed.iitb.ac.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : கணினி வழித் தேர்வு

மதிப்பெண் மற்றும் தேர்வு நடைமுறை :

  • மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 3 பிரிவுகளில் 3 மணி நேரத்திற்கு இந்த தேர்வு நடைபெறும். நியூமரிக்கல் ஆன்சர் டைப் மற்றும் மல்டிப்பிள் செலக்சன் கேள்விகளாக
  • இந்த 3 பிரிவுகள் அமைந்திருக்கும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 நவம்பர் 09

தேர்வு நாள் : 2019 ஜனவரி 19 (காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை)

இத்தேர்வு குறித்தான மேலும் விபரங்களுக்கு : www.uceed.iitb.ac.in

மாணவர்கள் தொடர்ச்சியாக இரண்டு முறை மட்டுமே, யூசீட் தேர்வினை எழுத அனுமதி உள்ளது. இதில் பெறும் மதிப்பெண் அடுத்த ஓர் ஆண்டிற்கு மட்டுமே செல்லும். இத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UCEED 2019 Exam Schedule Out, Exam on 19th Jan 2019
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X