தேர்வுகளுக்குத் தயாராக 5 சூப்பர் டிப்ஸ்!!

சென்னை: விரைவில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறவுள்ள தேர்வுகளுக்குத் தயாராக பள்ளி மாணவர்களுக்கு 5 சூப்பரான டிப்ஸ்கள் தரப்படுகின்றன.

எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்கும் தைரியம் உள்ள மாணவர்கள் எந்த நிலையிலும் தங்களது மனதைரியத்தை இழக்க மாட்டார்கள்.

தேர்வு மட்டுமல்லாமல் அனைத்து விஷயங்களிலும் அவர்கள் இதைப் பின்பற்றுவார்கள்.

தேர்வுகளுக்குத் தயாராக 5 சூப்பர் டிப்ஸ்!!

அனைத்து மாணவர்களும் தேர்வுகளில் இந்த டிப்ஸ்களை பின்பற்றி வெற்றி நிச்சயம்.

டிப்ஸ் 1

1. தேர்வுக்குப் படிக்கும் சரியான இடத்தைத் தேர்வு செய்வது மிகவும் அவசியம். அமைதியான சூழல் உள்ள இடத்தைத் தேர்வு செய்யவேண்டும். அப்போதுதான் நாம் படிப்பது மனதில் நிச்சயம் பதியும். மனப்பாடம் செய்யும் பாடங்களும் நினைவில் நிற்கும்.

தொந்தரவு

சுற்றுப்புறங்களில் தொந்தரவு இருக்கும் இடங்களை மாணவர்கள் தேர்வு செய்யக்கூடாது. அந்த இடங்களில் போதிய வெளிச்சம் இருப்பது அவசியம்.

படுத்துக்கொண்டு....

அதேபோல படுக்கையில் உட்கார்ந்துகொண்டு படிப்பதோ, படுத்துக் கொண்டு படிப்பதோ கூடாது. மேலும் குறைவான வெளிச்சம் உள்ள இடங்களிலும் படிக்கக்கூடாது. இவ்வாறு படிக்கும்போது தூக்கம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் படிக்கும் நேரத்தில் டி.வி. அருகிலோ, மொபைல்போன் அருகிலோ உட்காரக்கூடாது.

டிப்ஸ் 2

படிப்பதற்குத் தேவையான பொருட்கள் பாடங்கள் அனைத்தையும், அட்டவணை போட்டு தயார் செய்யவேண்டும். இத்தனை மணி நேரத்தில் இத்தனை பாடங்களை படித்து முடிக்கவேண்டும் என்று திட்டமிடுதல் அவசியம்.

உடல் சோர்வாக இருக்கும்போது கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை படிக்கக்கூடாது. உடல் உற்சாகமாக இருக்கும் நேரத்தில் இந்தப் பாடங்களைப் படிக்கவேண்டும்.

டிப்ஸ் 3

அட்டவணை போட்டு படிப்பதை தவறாமல் பின்பற்றவேண்டும். சில நேரங்களில் அட்டவணை நேரத்தை மனது மீறச் சொல்லும். ஆனால் அதையெல்லாமல் தவிர்த்து பாடத்தில் கவனம் செலுத்தவேண்டும். மேலும் இடையிடையே சிறிது நேரம் ஓய்வெடுத்தல் அவசியம்.

டிப்ஸ் 4

படிக்கும்போது குறிப்புகள் எடுத்துகொள்வது அவசியம். குறிப்புகள், அட்டவணை தயாரித்தல், படம் வரைதலை அடிக்கடி செய்து பார்க்கவேண்டும். இதன்மூலம் பாடங்கள் எளிதில் மனதில் பதியும்.

டிப்ஸ் 5

படிக்கும் நேரத்தில் மற்ற செயல்களுக்கும் இடம் தரக்கூடாது. படிக்கும் நேரத்தில் மனது அலைபாயும். அதை மாற்றி திட்டமிட்டபடி படித்தல் வேண்டும். மனதை மாற்றும் வகையான செயல்கள் குறுக்கிட்டால் அதற்காக படிப்பை விட்டுத்தரக்கூடாது. உங்களது எண்ணத்தை படிப்பு என்ற சாலையில் செலுத்தி, வெற்றி பயணத்தை நிறைவு செய்யவேண்டும். இந்த முறைகளைப் பின்பற்றி ஆண்டு இறுதித் தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெறுவது நிச்சயம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Concentrating on studies without prone to distractions can play vital role in attaining success. But on the flip side focusing on productive learning demands dedication, commitment and persistence to achieve the dream come true. It is not denying that every hour and minute matters a most while preparing for the exam. Tracking all these aspects will sure crop up several question on how to concentrate or focus your attention while studying. Here Careerindia has few tips on how to study effectively.5. Say 'NO' to irrelevant activities Study time is more challenging since it seeks much of your concentration and attention to meet the planned scheduled. It is common that you will be distracted with some invites, stress and untimely visits. In such cases it is utmost essential for you to keep yourself on the track by saying no unless it requires your attention.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X