தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலர் எழுத்து தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் சார்பில் காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்புத் துறை உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள 8,888 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதியன்று நடைபெற்ற இத்தேர்வில் மாநிலம் முழுவதுமிருந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்றனர்.
தற்போது இந்த எழுத்துத் தேர்விற்கான முடிவுகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.tnusrbonline.org என்னும் இணையதளத்தில் தங்களது பதிவெண்ணைக் கொண்டு தேர்ச்சி முடிவை அறிந்து கொள்ளலாம்.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக, உடல்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட இதர தேர்வுப் பணிகள் நடைபெறும். அதற்கான அழைப்புக் கடிதம் விரைவில் தேர்வுக் குழுமத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












