டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்விற்கு தயாராகுங்கள் அடுத்தடுத்து அறிவிப்பு காத்திருக்கின்றது

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படிக்கும் உங்களுக்கு குரூப் தொடர்பான கேள்வித்தாள்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள் அதனை வைத்து உங்கள் கட் ஆபை அதிகப்படுத்துங்கள். உங்கள் கட் ஆப்பில் முக்கிய பங்கு வகிப்பது நீங்கள் எடுக்க உதவுவது நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழிப் பாடம் ஆகும் .

மொழிப்பாடத்தில் நீங்கள் எவ்வளவு அதிகமாக மதிபெண்கள் பெறுகிறீர்களோ அவ்வளவு நல்லது.பொது அறிவு பகுதியில் நீங்கள் குறைவாக பெற்றாலும் மொழித்தாளில் 100க்கு நூறு மதிபெண் எடுத்தால் 60 கேள்விகளுக்கு பொது அறிவில் விடை தெரிந்தால் போதுமானது ஆகும்.

1. இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகள் அமைந்துள்ள சட்டவிதிகள் யாவை ?

1. சட்டவிதி 36-51
2. 51-ஏ
3. சட்டவிதி 14- 31

விடை: 1. சட்டவிதி 36-51

விளக்கம் : வழிக்காட்டு நெறிமுறைகளின் நோக்கமாக சமூக, பொருளாதார, அரசியல், நீதி, பெறுதல் ஆகும். இது முகவுரையுடன் நேரடி தொடர்புடையது ஆகும். காந்திய கொள்கைகள், சமத்துவ கொள்கை, மேற்கத்திய கொள்கையுடையது. அரசியல் சாசனத்தின் மனசாட்சி ஆகும்.

 

2. இந்திய அரசின் தலைவர் என அழைக்கப்படுபவர் யார் ?

1. பிரதமர்
2. குடியரசு தலைவர்
3. மத்திய அமைச்சர்கள்
விடை: 2. குடியரசு தலைவர்
விளக்கம்
:
குடியரசு தலைவர் அரசின் தலைவர் எனச் சட்டவிதி 53- 1 கூறுகின்றது. சட்ட்விதி 53(2) முப்படைகளின் தளபதி எனக்கூறுகின்றது.

3. பொருள்களின் நிறைகளை சார்ந்த விசை?

1. ஈர்ப்பியல் விசை
2. மின் காந்த விசை
3. அணுக்கரு விசை
விடை: 1. ஈர்ப்பியல் விசை
விளக்கம்
: அண்டத்தில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது ஈர்ப்பியல் விசை ஆகும்.ஈர்ப்பியல் விதிப்படி ஈர்ப்பியலில் விசையானது நிறைகளின் பெறுக்கற் பலனுக்கு நேர்த்தகவிலும் , அவற்றிற்கிடையேயான தொலைவின் இரும்புக்கு எதிர்த்தகவிலும் இருக்கும்.

Image source

4. அடிப்படை அளவுகள் என்றால் என்ன?

1. இயற்பியல் அளவுகளால் குறிப்பிட முடியாத அளவுகள் அடிப்படை அளவுகள் ஆகும்.
2. இயற்பியல் அளவுகளால் குறிப்பிட கூடிய அளவுகள் அடிப்படை அளவுகள் ஆகும்.
3. அளவுகளால் அளக்க முடிவது அடிப்படை அளவுகள் ஆகும்.
விடை: 1. இயற்பியல் அளவுகளால் குறிப்பிட முடியாத அளவுகள் அடிப்படை அளவுகள் ஆகும்.
விளக்கம்
: இயற்பியல் அளவீடுகளால் அளவீடு செய்தல் , அடிப்படை அளவீடுகளுக்கு நீளம், நிறை, காலம், வெப்ப நிலை, போன்றவை அடிப்படை அளவீடுகள் ஆகும்.

Image source

5. ஹரிபி கட்டாவோ என்பது என்ன?

1. வறுனை ஒழித்தல்
2. வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்தல்
3. சுழல் திட்டம்
விடை: 1. வறுனை ஒழித்தல்
விளக்கம்
: வறுமையை ஒழித்தல் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் . ஹரிபி கட்டாவோ என்ற திட்டம் இந்தியாவில் ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம் ஆகும். 1974 முதல் 1979 வரை இது செயல்படுத்தப்பட்டது.

6 இந்தியாவில் சுழல் திட்டம் எத்தனையாவது ஐந்தாண்டு திட்டத்திற்கு பிறகு கொண்டு வரப்பட்டது?

1. ஆறாவது ஐந்தாண்டு
2. மூன்றாவது
3. நான்காவது ஐந்தாண்டு திட்டத்திற்கு
விடை: 3. நான்காவது ஐந்தாண்டு திட்டத்திற்கு பிறகு

விளக்கம்: ஐந்தாவது திட்டத்தில் இறுதியில் 1978 முதல் 1980 வரை இந்தியாவில் சுழல் திட்டம் கொண்டு வரப்பட்டது. மத்திய ஜனதா அரசு மொராஜி தேசத்தின் காலத்தில் கொண்டு வரப்பட்டது.ஓர் ஆண்டின் இலக்கை இறுதியில் அசைய இயலாதபொழுது அடுத்த ஆண்டு இலக்கோடு சேர்ந்து திட்டமிட்டு செய்ல்படுத்துவதாகும்.

7. புதுப்பிக்க கூடிய வளங்கள் யாவை?

1. காற்றாற்ல், சூரிய ஆற்றல், நீர் ஆற்றல், அலை ஆற்றல்,
2. உலோக கனிமங்கள்,
3.  உலோகமற்ற கனிமங்கள்
விடை:1. காற்றாற்ல், சூரிய ஆற்றல், நீர் ஆற்றல், அலை ஆற்றல்,
விளக்கம் : நீர் மின்சக்தி என்பது புதுப்பிக்ககூடிய வளங்களுள் ஒன்றாகும். சீனாவில் உள்ள யாங்டிசி ஆற்றின் குறுக்கே முப்பள்ளதாகு அணையில் உலகின் மிகபெரிய நீர்மின் சக்தி நிலையம் அமைந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நீர்மின் சக்தி நிலையம் பக்ரா நங்கலில் உள்ளது

8. காற்று ஆற்றல் என்றால் என்ன?

1. வளங்களை புதுப்பித்து கொண்டே போகலாம்.
2. சூரிய ஆற்றலால கிடைக்கும் ஆற்றலை காற்றாற்றல் என்கின்றோம்.
3. காற்று வேகமாக தொடர்ந்து வீசும் பகுதியில் காற்றாற்றல் உற்பத்தி செய்யப்படுகின்றது
விடை: 3. காற்று வேகமாக தொடர்ந்து வீசும் பகுதியில் காற்றாற்றல் உற்பத்தி செய்யப்படுகின்றது
விளக்கம் :
காற்று வேமாக தொடர்ந்து வீசும் பகுதிகளில் காற்றாற்றல் உற்பத்தி நடைபெறுகின்றது. இதனை விசை பொருள் உருளை என ஆழைப்பார்கள்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் பகுதியில் உலகின் மிக்பெரிய காற்றலை நிறுவனம் உள்ளது

9. சுரங்கத் தொழிலை எவ்வாறு அழைக்ககின்றனர்?

1. கொள்ளைத் தொழில்
2. திரும்ப எடுக்கும் தொழில்
3. வேட்டையாடுதல் தொழில் என அழைக்கப்படுகின்றது
விடை: 1.கொள்ளை தொழில்
விளக்கம்
: சுரங்கத் தொழில் கொள்ளைத் தொழில் என அழைக்கப்படுகின்றது. கனிமநள் புதுப்பிக்கப்படகூடிய முடியாத வளங்களாகும். ஒரு முறை பயனுக்காக தோண்டி எடுக்கப்பட்ட கணிமங்களை திரும்பி வைக்க இயலாது.

10 உணவூட்டம் என்பது யாது

1. தற்சார்பு உணவூட்டம்
2. உட்கொல்லுதல், உட்கிரகித்தல், தன்மயமாதல் ஆகியன அடங்கியது
3. பிறசார்பு உணவூட்டன்
விடை: 2. உட்கொல்லுதல், உட்கிரகித்தல், தன்மயமாதல் ஆகியன அடங்கியது
விளக்கம்
: உணவூட்டம் இரு வகைப்படும் தற்சார்பு உணவூட்டம் , பிற சார்பு உணவூட்டம் ஆகும். அவற்றில் ஒட்டுண்ணி, புற ஒட்டுண்ணி அடங்கும்.

 

 

 

 

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கான கேள்வி பதில்கள் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்

English summary
Article tells about Tnpsc question practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia