குரூப் தேர்வுகளில் வெல்ல எளிய வழியாக கேள்வி தொகுப்புக்கள் படியுங்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வானது வருடத்தில் நான்கு அல்லது ஐந்து அறிவிப்புகள் வரும். இந்த டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கு பொது அறிவு பாடங்கள் இல்லாத கேள்வித்தாள் இருக்காது. கடந்த குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சம் பேர் எழுதியிருந்தார்கள் ஆனால் அவர்களில் 17 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தார்கள் போட்டி என்னவோ மொத்தம் 50 ஆயிரம் பேருக்குள்தான் போட்டி இருக்கும். இந்த போட்டி வளையத்துக்குள் வெற்றி பெற பொது அறிவு என்ற பாடத்தை படிக்க வேண்டும். படிப்பது மட்டுமல்லாமல் ரிவைஸ் செய்ய வேண்டும் எங்கே சிக்கல் என்று கண்டுபிடித்து கலைதல் வேண்டும்.

1.பிரதமர் என்பவர் பிரதமர் என்பவர் யார் அவருக்கான பணியாது ?

1 பெருமான்மை கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர்
2 அரசின் பெயருக்கு தலைவர்
3 சபை உறுப்பினாரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றர்
விடை: 1 பெருமான்மை கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர்
விளக்கம்
: பெரும்பாண்மை கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர். அரசாங்கத்தின் தலைவர் ஆவார். அமைச்சரவைக்கு தலைமை வகிக்கின்றார். பதவி பிராமாணம் ஜனாதிபதியால் செய்து வைக்கப்படுகின்றார்.

2. லோக் சபாவில் கூட்டத்தை கூட்டுவது யார்?

1 சபா நாயகர்
2 பிரதமர்
3 அமைச்சர்கள்
விடை: 1 சபா நாயகர்
விளக்கம் :
லோக்சபா ஐந்தாண்டு காலம் பதவி கொண்டது. சபாநாயகர் லோக் சபையை கூட்டுவார். கூட்டத்திற்கு தலைமை தாங்குவார். சபாநாயகர் பொதுவாக வாக்களிக்க முடியாது ஆனால் வாக்கு உண்டு. அரசியலில் நடுவு நிலைமை வகிக்க வேண்டும்

3. சாயத்திரி என அழைக்கப்படும் பகுதி எது?

1 கிழக்கு தொடர்ச்சி மலை
2 சதுரகிரி
3 மேற்கு தொடர்ச்சி  மலை  
விடை: 3. மேற்கு தொடர்ச்சி மலை

விளக்கம் :

தபதி வரை கன்னியாகுமரி வரை நீண்டுள்ள மலை மேற்கு தொடர்ச்சி மலையாகும். குரஜராத் முதல் தமிழகம் வரை பரவியுள்ளது. தமிழ்நாட்டின் உயரமான சிகரம் ஆனைமுடி இம்மலை தொடர்ச்சியில்தான் உள்ளது. மேற்கும் தொடர்ச்சியும் , கிழக்கும் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் பாலக்காடு

4. இந்தியாவின் முக்கிய உணவு பயிற்களில் ஒன்று ?

1 நெல்
2 கேழ்வரகு
3 ஓட்ஸ்
விடை: 1 நெல்
விளக்கம்
:
இந்தியாவின் முக்கிய பயிராக உள்ள நெல் ஆகும். நெல் உற்பத்தியில் சீனா முதலிடம் இரண்டாவது இடம் இந்தியா. இந்தியாவின் பாரம்பரிய பயிர் நெல் ஆகும். தமிழ்நாட்டில் நெற்களஞ்சியம்   தஞ்சாவூர் ஆகும்.

5. மலைகாடுகள் இந்தியாவில் எங்கு காணப்படுகின்றன?

1 தக்கானம் , ராஜஸ்தான்
2 இமாலயம், மேற்கு தொடர்ச்சி விந்திய மலை,
3 இமயமலை சரிவு
விடை: 2 இமாலயம், மேற்கு தொடர்ச்சி விந்திய மலை,
விளக்கம்
: மலைகாடுகள் இமாலயம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படுகின்றது. இங்கு நீலகிரி மலை, ஆனை மலை பெயர் பெற்றது. ஓக், மாப்பிள் இங்கு சிறப்பிடம் பெறுகின்றது.

6. இந்தியாவின் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் எப்பொழுது அறிவிக்கப்பட்டது ?

1 2007- 2012
2 2012- 2017
3 2002- 2007
விடை: 1. 2007- 2012
விளக்கம்
:

விரைவான உள்ளடக்கிய வளர்ச்சியை உள்ளடக்கியது பதினொன்றாவது வளர்ச்சி திட்டம் ஆகும். ஆரம்ப கல்வி அறிவு விகிதம் 25% உயர்த்துதல்

7. இந்தியாவில் இரண்டாவது பசுமை புரட்சி கொண்டு வந்தது ?

1 மன்மோகன் சிங்
2 அமர்த்தியா சென்
3 எம். எஸ். சுப்பிரமணியம்
விடை: 1 மன்மோகன் சிங்
விளக்கம் :

இந்தியாவில்  இரண்டாவது பசுமை புரட்சி 93வது அறிவியல் மாநாட்டில் 2006 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. முதல் பசுமை புரட்சி சாதனையை உயர்த்துதல் வட்டார மற்றும் அனைத்து பயிர்களின் வளர்ச்சிக்கு சமநிலை ஏற்படுத்துதல்

8. இந்தியாவிலுள்ள பாரம்பரிய நீர்பாசன முறைகள் எத்தனை ?

1 தேக்கு நீர் பாசன முறை
2 கால்வாய் பாசனம்
3 கப்பி முறை, சங்கிலி சுழற்சி முறை, ஏற்றம் முறை
விடை: 3 கப்பி முறை, சங்கிலி சுழற்சி முறை, ஏற்றம் முறை

விளக்கம் :

இந்தியாவின் பாரம்பரிய நீர்பாசனங்களான கப்பிமுறை, ஏற்றம் முறைகள் எந்தளவிற்கு உதவியதோ அதைவிட காலவாய் பாசனம் தெளிப்பு நீர் பாசனம் , தேக்கு நீர் பாசனங்கள் இன்றைய நடைமுரையிலுள்ள நவீன பாசன முறையாகும்.

9. பயிர் அறுவடையை தமிழ்நாட்டில் எவ்வாறு கொண்டாப்படுகின்றது ?

1 பிகு
2 பொங்கல்
3 ஓணம்
விடை: 2 பொங்கல்
விளக்கம் :

பயிற் அறுவடையானது தமிழ்நாட்டில் பொங்கல் விழாவாக கோலகாலமாக கொண்டாடப்படுகின்றது. கதிர் அடித்தல் முற்றிய தாவரங்களை அவற்றின் தாய் தாவரங்களிலிருந்து நீக்குதல் ஆகும்.

10. பாலில் கொடுமை தடுப்பு?

1 முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என மூன்று நிலைகளை கொண்டது
2 பாலிய கொடுமைப்புரிவர்களை தண்டித்தல்
3 சிக்கிச்சை அளித்தல்
விடை: 1 முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என மூன்று நிலைகளை கொண்டது
விளக்கம் :

பாலியல் கொடுமைக்கு முதல் நிலை தடுப்பாக பாலியல் கொடுமை நடைபெறாமல் தடுத்தல் . இராண்டாவது தடுப்பில் நடந்த தவறை மீண்டும் நடக்காமல் தடுத்தல், மூன்றாம் நிலை தடுத்தலான பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மனநிலை சிகிச்சை கொடுத்தல்.

சார்ந்த பதிவுகள் : 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்விற்கு தயாராகுங்கள் அடுத்தடுத்து அறிவிப்பு காத்திருக்கின்றது

போட்டி தேர்வுக்கான பொது அறிவு கேள்வி பதில்கள் படியுங்க

English summary
Article tells about question practice for aspiarns

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia