டிஎன்பிஎஸ்சி போட்டிதேர்வுக்கு தமிழ் பயிற்சி வினாக்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்கும் அனைவருக்குமான பொழிப்பாடத்தில் கேரியர் இந்தியா தொகுத்து வழங்கும் தமிழ்மொழி கேள்வி பதில்கள் நன்றாக படிக்கலாம் . போட்டி தேர்வுக்கு மொழித்தாள் குறித்து பார்வை இருத்தல் அவசியம் ஆகும் .

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் அனைவருக்கும் உதவும் கேள்விகளின் தொகுப்பு

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு என்பது போட்டிகள் அதிகரிக்கும் தேர்வாகும் . நாளுக்கு நாள் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகும் நிலையுள்ளது . அதற்கு தகுந்தார்போல் நாமும் நம்மை தயார் படுத்திகொள்ள வேண்டும்.

1 ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய்கள் ஒரு பயனிலையை கொண்டு முடிவது , பயனிலை என்பது முடிக்கும் சொல் இது எந்த தொடர்
விடை: தனிநிலை தொடர்


2 ஒரு தொடரில் உள்ள விணைமுற்று எதிர்மறையில் இருந்தால் அது என்ன தொடர்
விடை: எதிர்மறை தொடர்


3 திவ்விய கவி அழகிய மனவளதாசன் என்ற சிறப்பு பெயர் கொண்டவர் யார்
விடை: திருவேங்கட அந்தாதி இயற்றிய பிள்ளை பெருமாள் ஐய்யாங்கார்


4 முத்துகுமாரசுவாமி பிள்ளைத்தமிழ் என்பது
விடை: சிற்றிலக்கிய வகையான பிள்ளைத்தமிழ் நூல்களுள் ஒன்று


5 கல்லை குடைந்தும் செதுக்கியும் கோயில் கலையை வளர்த்ததுடன், சிற்ப கலையையும் வளர்ந்தனர்
விடை: பல்லவர்கள்


6 பல்லவர்கால் சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது யாது

விடை:
மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைப்பாறை சிற்பம் உலகப் புகழ் பெற்றது ஆகும்


7 இந்தியாவில் சட்டமன்றத்திற்கு முதன்முதலாக அமர்த்தப்பட்ட தாழ்த்தப்படோர் இனத்தவர்
விடை: டாக்டர் அம்பேத்கர்


8 ஞான போதினி என்ற இதழின் ஆசிரியர்
விடை : எம் எஸ் பூரணலிங்கம்


9 சென்னை பல்கலைகழகத்திலும் , அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும் தன் அன்னையின் பெயரால் சொர்ணாம்பாள் அறக்கட்டளையை நிறுவியவர்
விடை: ரா.பி.சேதுபிள்ளை


10 இவரை "தமிழ்நாட்டின் ரூசோ" என்று பாராட்டியவர் சர்.ஏ.ராமசாமி
விடை: பெரியார்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு நடப்பு கேள்விபதில் படிங்க

டிஎன்பிஎஸ்சி மதிபெண்களின் இருப்பிடமான தமிழ் பயிற்சி வினாக்கள்

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்கள் படிக்கவேண்டிய தமிழ் மொழிப்பாடத்திற்க்கான கேள்வி பதில்கள்

English summary
here article tell about tnpsc tamil practice questions

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia