தமிழகத்தில் பரவலாக பெய்து வரம் தொடர் மழையின் காரணமாக வரும் சனிக்கிழமையன்று (நவம்பர் 24) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக கரையோரத்தில் ஏற்பட்ட கஜா புயலின் காரணமாகக் கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சனிக்கிழமையன்று (நவம்பர் 24) டிஎன்பிஎஸ்சி சார்பில் நடைபெறவிருந்த புள்ளியியல் ஆய்வாளர் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கான மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
மேலும், கூட்டுறவுச் சங்கங்களுக்கான இளநிலை ஆய்வாளர் பதவிக்கு நவம்பர் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு நவம்பர் 28ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி நவம்பர் 30ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












