டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிங்க தேர்வை வெல்லுங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை பொருத்தவரை கேள்விகளின் போக்கு எப்பொழுதும் சாவால் நிறைந்ததாக இருக்கும் என்ற கருத்து தேர்வர்களிடையே நிலவுகின்றது. ஆனால் தேர்வுக்கான போட்டிகள் அதிகரிக்கும் பொழுது தேர்வுக்கான போக்கும் அதிகரிக்கும. டிஎன்பிஎஸ்சி தனது பார்வையை தனது பார்வையை நவீனப்படுத்தி பரந்து விரிந்து செயல்படுத்துகின்றது.

1. இந்திய அரசு சட்டம் என அழைக்கப்படுவது எது ?

1. மீண்டோ மார்லி 1909 சட்டம்
2. 1919
3. 1935 இந்திய அரசு சட்டம்
விடை: 1. மீண்டோ மார்லி 1909 சட்டம்
விளக்கம் :
இந்திய கவனர் ஜென்ரல் மிண்டோ மற்றும் இந்தியாவின் செயலர் மார்லி பிரபுவினால் கொண்டு வரப்பட்டது. முதன்முதலாக நேரடி தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது. முஸ்லீம்களுக்கு வகுப்புவாத இடஒதுக்கீடு முறையினை அறிமுகம் செய்தது.

 

2. நீதி பரிசீலினை என்றால் என்ன?

1. இந்திய அரசியலமைப்பிற்கு முரண்பட்டு இருந்தால் அது செல்லாதது என அறிவித்தல்.
2.  நீதிமன்றம் மத்திய அரசின் நடவடிக்கைகளில் தலையிடுதல்
3.  அடிப்படை உரிமைகளை ஆய்வு செய்வதல்
விடை: 1 இந்திய அரசியலமைப்பிற்கு முரண்பட்டு இருந்தால் அது செல்லாதது என அறிவித்தல்.
விளக்கம்
: இந்தியாவின் அனைத்து சட்டங்களையும் சட்ட சம்மந்தமான மறுபரிசீலிணை செய்ய சட்ட விதி 13 வழிவகுக்குகின்றது. இந்திய அரசியல்
அமைப்பு சட்டத்திலிருந்து வேறுபட்டு இருந்து அச்சட்டத்தை செல்லாதது என அறிவிக்க உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.

3. சூஃபிசம் என்றால் என்ன?

1. இவர்கள் தீயிலிருந்து வந்ததாக தெரிவித்து கொள்கின்றனர்
2. கருப்பு நிறத்துணியை கொண்டு நீளமான மேலங்கிகளை தயாரித்து கொண்டதால் இத்துறவிகள் சூஃபிகள் எனப்பட்டனர்.
3.  அரேபியர்கள் தங்களை சூஃபிகள் என அழைத்து கொண்டனர்
விடை: 2 கருப்பு நிறத்துணியை கொண்டு நீளமான மேலங்கிகளை தயாரித்து கொண்டதால் இத்துறவிகள் சூஃபிகள் எனப்பட்டனர்.
விளக்கம்:
சூஃ எனபது கருப்பு நிறத்துணி என்பது பொருள் கொண்டது. சூஃபிகள் என்பவர்கள் கருப்பு நிறத்துணியை கொண்டு நீளமான மேலங்கிகளை தயாரித்து கொண்டாதால் இத்துறவிகள் சூஃபிகள் எனப்பட்டனர்.

4. வக்கியாத்- இ- பாபரி என பாபர் குறிப்புகளை எழுதியவர் யார்?

1. ஷெர்ஷா
2.  ஹூமாயூன்
3. பாபர்
விடை: 3. பாபர்
விளக்கம் :
பாபர் இந்தியாவின் நிலை தனது வெற்றி தோல்விகள் படையெடுப்புகள் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார். இந்த நூலின் மூலம் பாபர் காலம் அறியலாம். இந்நூலை பாபர் நாமா என அழைக்கப்படுகின்றது.

5. இந்தியாவின் முதல் உப்பகற்றல் ஆலை எது?

1 எண்ணுரில் அமையவுள்ளது
2 தஞ்சாவூரில் அமையவுள்ளது
3 டெல்லியில் உருவாகவுள்ளது
விடை:1 எண்ணுரில் அமையவுள்ளது
விளக்கம்:
குடிநீரை பெற பெற மலிவுவிலை சுற்றுசூழலுக்கு ஏற்ப தொழில்நுட்பமுறை கொண்டது. அது  உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில் நுட்பம் ஆகும். இந்த ஆலையை இயக்க பயன்படுகின்றது. இதனை எல்எல்டி என்னும் தொழில்நுட்பம் முறையில் அமைக்கலாம்.

6. சைக்கில் ஷேரிங் திட்டம் என்றால் என்ன?

1. மோட்டார் வாகன போக்குவரத்து கொள்கை
2. மோட்டார் அல்லாத வாகன போக்குவரத்து கொள்கை
3. டிஜிட்டல் பயன்பாடு
விடை: 2. மோட்டார் அல்லாத வாகன போக்குவரத்து கொள்கை
விளக்கம்
:
இந்தியாவிலுள்ள மாநாகராட்சியில் முதன்முறையாக மோட்டார் அல்லாத வாகன போக்குவரத்து கொள்கையை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது. காற்று மாசுவை குறைக்க சைக்கிள் ஷேரிங் திட்டம் மாநாகரம் முழுவதும் 378 நிலையங்களில் விரைவில் செயல்படுத்தவுள்ளது.

7. தமிழகத்தின் முதல் டிஜிட்டல் கிராமம் என அழைக்கப்படுவது ?

1.  பிச்சம்பாளையம்
2. அம்மானூர்
3. மண்ணரை
விடை: 2. அம்மானூர்
விளக்கம்
: காஞ்சிபுரம் மாவட்டம் அம்மானூர் கிராமத்தில் இலவச வை-பை வசதியை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் இதனை தமிழகத்திம் முதல் டிஜிட்டல் கிராமம் என அழைக்கின்றோம்.

8. எல்லைப் பாதுகாப்பை கண்காணிக்க இந்தியாவில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளது எது?

1. ட்ரோன் சிறய ரக விமானம்
2. செயற்கை கோள்
3. ரோந்து ரோபோ ரக வாகனம்
விடை: 1. ட்ரோன் சிறய ரக விமானம்
விளக்கம்
: இந்திய எல்லையில் சீன ராணுவத்தின் நடவடிக்கையை கண்காணிக்க ட்ரோன் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இது ஒரு சிறியரக விமானம் ஆகும். இது 65 ஆயிரம் அடி உயரம் பறக்க கூடியஒன்று ஆகும்.

9. முதல் பழங்குடியினர் தொழில்முனைவு உச்சிமாநாடு எங்கு நடைபெற்றது ?

1. சடடீஸ்கர்
2. மத்திய பிரதேசம்
3. ஒடிசா
விடை:1. சட்டீஸ்கர்
விளக்கம் :
நிதி ஆயோக் மற்றும் அமெரிக்க அரசு ஆகியவை இணைந்து இந்தியாவின் முதல் பழங்குடி தொழிமுனைவு உச்சிமாநாட்டினை நடத்தின. இந்தியாவில் நடைபெற்ற 8வது உலகளாவிய தொழில்முனைவு உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாகும். நாடுமுழுவதுமுள்ள பழங்குடி தொழில்முனைவோர்கள் இந்த மாநாட்டில் பங்கு பெற்றார்கள்.

சார்ந்த பதிவுகள்

போட்டி தேர்வில் வெற்றி பெற வினா விடைகளின் தொகுப்பு 

English summary
the article tells about questions for TNPSC aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia