குரூப் தேர்வுகளுக்கான கேள்விகளுக்கான பதில்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் கேள்விகளுக்கு விடையளிக்க  வேண்டிய  பொருப்பினை உணர்ந்து விடையளிக்கவும். போட்டி  தேர்வுக்கு விண்ணப்பித்தோர்கள் படிக்க வேண்டிய கேள்வி பதில்களை தொகுத்து வழங்கியுள்ளோம். 

1. வாட்ஸ்அப் (Whatsapp) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

1. 2009
2. 2008
3. 2000
4. 1990

விடை: 2009 (தலைமையகம் கலிபோர்னியா)

விளக்கம்: வாட்ஸ்அப் என்பது ஒரு ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மெசேஜிங் அப்ளிகேஷன். இதன் மூலம் எஸ்.எம்.எஸ், வீடியோக்கள், குரல்வழி செய்திகள் (Audio Message), லிங்ஸ் எனப்படும் இணைய சுட்டிகள் போன்றவற்றை ஸ்மார்ட்போன் மூலம் அனுப்ப முடியும்.

 

2. இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது?

1.கொல்கத்தா பல்கலைக்கழகம்
2. உஸ்மானியா பல்கலைக்கழகம்
3. ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம்
4. பஞ்சாப் பல்கலைக்கழகம்

விடை: 1. கொல்கத்தா பல்கலைக்கழகம்

விளக்கம்: கொல்கத்தா பல்கலைக்கழகம் (University of Calcutta, அல்லது Calcutta University) ஜனவரி 24,1857ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தெற்கு ஆசியாவிலேயே பல்வேறு துறைகளைக் கொண்ட முதல் பல்கலைக்கழகம் இது.

 

3. இந்தியாவில் எத்தனை பஞ்சாயத்துகள் உள்ளன?

1. 2.4 லட்சம்
2. 1.4 லட்சம்
3. 3.4 லட்சம்
4. 4.3 லட்சம்

விடை:1. 2.4 லட்சம்
விளக்கம்
: பஞ்சாயத்துகள் சட்டம் 1996 என்பது இந்திய அரசியலமைப்பின் 1992, 73 வது திருத்தச் சட்டத்திற்கு உட்படாத பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்ட சட்டமாகும்.

இச்சட்டம் கிராம சபை தங்கள் இயற்கை வளங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை வழங்குவதற்காக 1996-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் நாள் சட்டமாக்கப்பட்டது.

 

4. மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

1. 2004
2. 2000
3. 2002
4. 2003

விடை: 2004

விளக்கம்: தென் மாவட்ட மக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பின் மத்திய அரசு 1981ல் நீதிபதி ஜஸ்வந்த் சிங் கமிஷனை அமைத்தது.தென் மாவட்ட மக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பின் மத்திய அரசு 1981ல் நீதிபதி ஜஸ்வந்த் சிங் கமிஷனை அமைத்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நிரந்தரக் கிளையமைக்க கமிஷன் பரிந்துரைத்தது. குடியரசுத் தலைவரின் அறிவிப்புக்கு பின் 24.7.2004ல் நிர்ணயிக்கப்பட்ட 12 நீதிபதிகளுடன் மதுரைக் கிளை 13 தென் மாவட்டங்களுக்கு நீதி பரிபாலனத்தைத் தொடங்கியது.

 

5. ஜனாதிபதி பரிசு பெற்ற முதல் தமிழ் படம் எது?

1.மருதநாட்டு இளவரசி
2.அந்தமான் கைதி
3.மர்மயோகி
4.மலைக்கள்ளன்

விடை: 4. மலைக்கள்ளன்
விளக்கம்
: மலைக்கள்ளன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வசனம் மு. கருணாநிதி, இயக்கம்: எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு, எம். ஜி. ஆர், பானுமதி ராமகிருஷ்ணா, ஸ்ரீராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். ம. கோ. ராமச்சந்திரன் நடிப்பில் ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படம். குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம்.

 

6. இந்திய ரயில்வேயின் போக்குவரத்து மண்டலங்கள் எத்தனை?

1. 20
2. 17
3. 15
4. 4

விடை: 17

விளக்கம்: இந்தியன் ரயில்வே அரசின் பொதுத்துறை நிறுவனம். இந்தியன் ரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்; ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது; 16 லட்சம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலுள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் 63,140 கி.மீ.

 

7. செபி (SEBI) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

1. 2003
2. 1988
3. 2002
4. 1900

விடை: 2.1988

விளக்கம்: செபி (SEBI) என்று பரவலாக அறியப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India) இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

 

8. உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொண்ட நாடு எது?

1. மால்டோவா
2. ருமேனியா
3. மால்டோவா
4. டென்மார்க்

விடை: 4. டென்மார்க்

விளக்கம்: வடக்கு ஐரோப்பாக் கண்டத்திலுள்ள டென்மார்க் நாடானது தென்மேற்கு தீவுகள், கிரீன்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. இதன் தலைநகரம் கோப்பன்ஹேகன் உலகத்திலேயே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 2016 ஆம் ஆண்டு டென்மார்க் முதலிடம் பிடித்தது.

 

9. ஃபல்மினாலாஜி என்பது ?

1. பிலிம் பற்றிய அறிவியல்
2. இடி பற்றிய அறிவியல்
3. மின்னல் பற்றிய அறிவியல்
4. புயல் காற்று பற்றிய அறிவியல்

விடை: மின்னல் பற்றிய அறிவியல்

விளக்கம்: காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள் உராய்வதால் ஆகாயத்தில் மின்சாரம் உண்டாகிறது. இந்த மின்சாரம் பூமியில் பாயும்போது இடிமின்னல் உண்டாகிறது. இடி, மின்னல் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும். சிறிது நேரம் கழித்து இடி சத்தம் கேட்கும். காரணம் ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 3 லட்சம் கி. மீ. ஒலியின் வேகம் ஒரு நொடிக்கு 330 மீ. மட்டுமே.

 

10. கேரளாவின் மிகப்பெரிய ஏரி

1. தேக்கடி
2. வேம்பநாடு
3. குட்டநாடு
4. குன்னமடை காயல்

விடை: வேம்பநாடு

விளக்கம்: வேம்பநாட்டு ஏரி, வேம்பநாட்டுக் காயல் இந்தியாவிலேயே மிகவும் நீளமான ஏரி. இதன் பரப்பளவு 1512 சதுர கி.மீ. ஆழப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்கள் இவ் ஏரியின் எல்லைகளாக அமைந்துள்ளன. பெரியாறு, மீனச்சில், பம்பா முதலிய ஆறுகள் இந்த ஏரியில் கலக்கின்றன.

 

சார்ந்த பதிவுகள்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிங்க

English summary
the article tells about tnpsc questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia