போட்டி தேர்வின் வெற்றியினை பெற தொடர்ந்து படியுங்க

Posted By:

வருடம் தோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வானது மூன்று முதல் நான்கு குரூப்களுக்கு நடைபெறுகின்றது. அவற்றினை வெல்ல லட்சகணக்கில் தேர்வர்கள் பங்கேற்பது வழக்கம் ஆனால் அவற்றில் வெற்றியினைப் பெற பல்வேறு யுக்திகளைப் பலர் கையால்வதுண்டு. டிஎன்பிஎஸ்சியில் வேலை வாய்ப்பு பெற வேண்டுமானால் அந்தந்த குரூப்களுக்கு ஏற்ப நாம் சிறப்பாக தேர்வுயுக்திகளை கையாள வேண்டும்.

அடுத்தடுத்த தேர்வுகளுக்கு ஏற்ப தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு தயார் செய்ய வேண்டியது கடமையாகும். ஆண்டு தோறும் வெளியிடப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிக்கையில் தேதிகள் மாறுபடாலாம் ஆனால் தேர்வுகள் நடக்கும் .

1.பத்ராபாகு எந்தெந்த அரசர்களையெல்லாம் சமணத்திற்கு மதமாற்றம் செய்தார்?

1. சந்திர குப்த மௌரியர், பிம்பி சாரார், அஜாத சத்ரு
2. அசோகர், கனிஷ்கர், ஹர்சர்
3.  பிம்பிசாரர், அஜாத சதரூ
விடை: 1. சந்திர குப்த மௌரியர், பிம்பி சாரார், அஜாத சத்ரு
விளக்கம்
: பத்ரபாகு என்பவர் சமணமதத்தின் துறவியாவர். இத்துறவியின் மூலமே சந்திர குப்தமௌரியர், பிம்பி சாரார், அஜாத சத்ரு போன்றோர் மதமாற்றம் பெற்றனர். பிம்பி சாரர், அஜாத சத்ரு சமண சமயத்திற்கு ஆதரவு அளித்தனர்.

2 தன்னாட்சி கழகத்தை எங்கு நிறுவினார்?

1. பூனே
2. கல்கத்தார்
3. மும்பை
விடை: 3. மும்பை
விளக்கம்
: 1916இல் திலகர் தன்னாட்சி கழகத்தை மும்பையில் நிறுவினார். அயலாந்தை சேர்ந்த அன்னிபெசண்ட் சென்னையில் தன்னாட்சி கழகத்தை தொடங்கி வைத்தார். காமன் வீல், நியூ இந்தியா என்ற பத்திரிக்கையை அன்னிபெசண்ட் தொடங்கினார்.

3 ஏழு கடலை நீந்தி கடந்த முதல் ஆசியர் எனும் பெருமையை பெற்றுள்ள இந்திய நீச்சல் வீரர் யார்

1 பக்தி ஷர்மா,
2 அஷ்வின் மேனன்
3 ரேஹன் டோஞ்சா
விடை: 3 ரேஹன் டோஞ்சா
விளக்கம்
: நியூசிலாந்தின் வடக்கு மற்றும் கிழக்கு தீவுகளுக்கு இடையே உள்ள குக் நீரிணையை நீந்தி கடந்த முதலாவது ஆசிய மற்றும் மிகவும் இளவயது வீரர் ரோஹன் மோர் ஆவார். இவர் பூனேவில் வசிக்கும் நீண்ட தொலைவு நீச்சல் வீரர் ஆவார்.

4. 8வது சீனியர் தேசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியினை வென்ற ஹாக்கி அணி எது ?

1. மத்திய பிரதேசம்
2. ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம்
3. அரியனா

விடை: 2. ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம்
விளக்கம்
: பிப்ரவரி 11இல் நடைபெற்ற 8வது சீனியர் மகளீர் ஹாக்கி சாம்பியன்சிப் போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் மத்திய பிரதேசத்தை 4-0 கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

5. இந்தியாவின் நெடுஞ்சாலை திறன் கையேட்டை வெளியிட்ட மத்திய அமைச்சர் யார் ?

1.  அருண்ஜெட்லி
2. நிதின் கட்காரி
3. மேனகா காந்தி
விடை: 2. நிதின் கத்காரி
விளக்கம்
: இந்தியாவின் முதலாவது நெடுஞ்சாலை திறன் கையேட்டை மத்திய சாலை போக்குவரத்து ஞெடுஞ்சாலை, கப்பல் மற்றும் நீர் ஆதாரங்கள், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புதுப்பிப்பு துறை அமைச்சர் வெளியிட்டார். ஹெச்சிஎம் என அழைக்கப்படும் இந்த கையேடு அறிவியல் ஆராய்ச்சி, மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.

6. இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் ஈரவை கொண்டுள்ளது?

1. 7 மாநிலங்கள்
2. 2 மாநிலங்கள்
3. 5 மாநிலங்கள்
விடை: 1. 7 மாநிலங்கள்
விளக்கம்
: இந்தியாவில் உத்திர பிரதேசம், பீகார், கர்நாடாகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா , ஜம்மு காஷ்மீர், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ஈரவை காணப்படுகின்றன. இந்தியாவில் 22 மாநிலங்கள் ஓரவை கொண்ட மாநிலங்கள் உள்ளன.

7. சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் ரத்தத்தில் ஏற்படும் நோய் என்ன?

1. டயாப்டீஸ்
2. ரத்த அழுத்தம்
3. உயர் ரத்த அழுத்தம்
விடை: 1 டயாப்டீஸ்
விளக்கம்
: சர்க்கரையின் அளவு ரத்தத்டில் அதிகமாக இருந்தால் ஏற்படும் நோய் டயாப் டிஸ் மற்றும் சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் ஏற்படும் நோய் டயாப்டிஸ் இன்சிபிடிஸ்

8. ஆக்ஸானின் உள்ள சைட்டோபிளாசத்துக்கு என்ன பெயர்?

1. ஆக்ஸோபிளாசம்
2. ஆக்ஸான்
3. ஆன்டிபாடி
விடை:1.ஆக்ஸோபிளாசம்

விளக்கம்:ஆக்ஸானின் சைட்டோ பிளாசத்துக்கு ஆக்ஸோ பிளாசம் என்று பெயர். ஆக்ஸானின் மீது மையலின் உறையால் உண்டாக்கப்படும் இடைவெளிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன.

9. பணமசோதா எந்த அவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படுத்த முடியும் ?

1. மக்களவை
2. மாநிலங்களவை
3. கூட்டுக்கூட்டுத்தொடர்
விடை: 1. மக்களவை
விளக்கம்
: பணமசோதா மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட முடியும் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த முடியாது. மாநிலங்களவையின் பணமசோதா பரிந்துரைகளை மக்களவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஒரு மசோதா பணமசோதாவா இல்லையா என்பதை மக்களவை தலைவரே விசாரிக்க வேண்டும்.

10. ஹேபியஸ் கார்பஸ் எனப்படுவது எது?

1. நீதிமன்றத்தில் ஒருவரை ஆஜர்படுத்துதல் ஆகும்
2. நாம் கட்டளை இடுவது என்பது பொருளாகும்
3.  வழக்கு விசாரணை தடை

விடை : 1. நீதிமன்றத்தில் ஒருவரை ஆஜர்படுத்துதல்
விளக்கம்
: குடிமக்களை தகுந்த காரணத்திற்க்காக கைது செய்து காவலில் வைக்கும் அதிகாரத்தை அரசாங்கம் பெற்றுள்ளது. இந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தப்பட்டால் குடிமக்களின் சுதந்திர உரிமை பாதிக்கப்படும் எனவே எவரை எனவே எவரையும் சட்டமுறைப்படி இல்லாமல் சிறைப்படுத்தகூடாது என்பதற்காகவே உதவி செய்யலாம்.

 

சார்ந்த பதிவுகள்

English summary
Article tells about tnpsc questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia