போட்டி தேர்வில் வெற்றி பெற வினா விடைகளின் தொகுப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு கனவை வெல்ல படித்து கொண்டிருக்கும் அனைவருக்கும், தேர்வுக்கான சரியான இலக்குகள் வடிவமைத்து வெற்றி பாதை நோக்கி செல்ல வழிகாட்டுகின்றோம். பின்ப்பற்றி தேர்வை வெல்லவும். நீங்கள் எந்த அளவிற்கு தேர்வு தொடர்பில் முழுமையான புரிதலுடன் இருக்கின்றீர்களோ அந்த அளவிற்கு தேர்வினை வெல்லலாம்.

1.எந்த நகரத்தில் சம்ஸ்கிருதம் கற்றுகொள்வதற்கான முதல் மையம் அமைந்துள்ளது?

1. அகமதாபாத்
2. ராஜஸ்தான்
3. டெல்லி
விடைகள்:1. அகமதாபாத்
விளக்கம்
: சமஸ்கிருதமொழியை பேச கற்றுக்கொள்ள குஜராத் பல்கலைகழகம் 6 மாத கால புதிய பாடத்திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே சமஸ்கிருதம்  மொழியை கற்க பாடத்திட்டம் அமைத்து கற்றுகொடுப்பது இதுதான் முதல்முறை. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இத்திட்டத்தை  தொடங்கி வைத்தார்.

2. பார்வையற்றோர்க்கான 13வது தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியை கிஷன் கங்கோலி வென்றுள்ளார் இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

1. ஆந்திர பிரதேசம்
2. கர்நாடகா
3. மகாராஷ்டிரா
விடை:2. கர்நாடகா
விளக்கம்
: பிப்ரவரி12, 2018இல் நடைபெற்ற பார்வையற்றோர்க்கான 13வது தேசிய ஏ சதுரங்க சாம்பியன்ஷிப்  நடப்பு சாம்பியனான கர்நாடகாவின் கிஷன் கங்கோலி பட்டத்தை வென்றுள்ளார். இப்போட்டியை அனைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பு நடத்தியது. 10.5 புள்ளிகளுடன் தொடர்ந்து 5வது முறையாக சாம்பியானாகியுள்ளார் கங்கோலி.

3. மாநில சட்டமன்றம் கூட்டவோ கலைக்கவோ யாருக்கு அதிகாரம் உண்டு?

1. ஆளுநர்
2. குடியரசு தலைவர்
3. சட்டசபை
விடை:1. ஆளுநர்
விளக்கம் :
ஆளுநர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இருக்க வேண்டுமென சட்டவிதி 153 கூறுகின்றது. மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநர் கையில் உள்ளது. ஆளுநர் நியமிக்கப்படும் மாநிலத்தை சார்ந்தவராக இருக்ககூடாது.

4. ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் முறை யாது?

1 குடியரசு தலைவர் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும்பொழுது
2 நான்கில் இரு பங்கு உறுப்பினர் முன்மொழிய வேண்டும்
3 அமைச்சரவையின் சட்டமசோதாவை ஏற்காதப் பொழுது

விடை: 1 குடியரசு தலைவர் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும்பொழுது
விளக்கம் :
குடியரசு தலைவர் அரசியலமைப்பு சட்டத்தை மீறும்பொழுது பதவிநீக்கம் செய்யலாம். குடியரசு தலைவரை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்ற இரு அவையில் அல்லது ஏதாவதொரு அவையில் நான்கில் ஒரு பங்கு அவை உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும். ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய  14 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும்.

 

5 .அரசுக்கு வழிகாட்டுக்கும் நெறிமுறைகள் எந்த நாட்டிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது?

1. ஜெர்மனி
2. ஜப்பான்
3. அயர்லாந்து
விடை: 3.அயர்லாந்து
விளக்கம்
: அயர்லாந்து அரசியலமைப்பு சட்டத்திலிருந்து பெறபட்டவை. சமத்துவம், சுதந்திரம், மக்காளாட்சி மற்றும் காந்திய கொள்கை அணைந்தும் இணைந்த அமைப்பு ஆகும்.

6. கூட்டாட்சியில் அதிகாரம் எவ்வாறு இருக்கும்?

1. கூட்டாட்சியில் அதிகாரம் முழுவதும் மைய அரசிடமே இருக்கும்
2. அதிகாரம் முழுவதும் எழுதப்பட்ட , நெகிழ்ச்சியற்ற அரசியலமைப்பே மேலாண்மை மிக்கதாக விளங்கி மைய அரசுக்கும் மாநில அரசுக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும்.
3.  மாநிலங்கள் அவையின் மூடிவே இறுதியானது ஆகும்.
விடை: 2. அதிகாரம் முழுவதும் எழுதப்பட்ட , நெகிழ்ச்சியற்ற அரசியலமைப்பே மேலாண்மை மிக்கதாக விளங்கி மைய அரசுக்கும் மாநில அரசுக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும்.
விளக்கம் :
கூட்டாட்சி அரசு மாநில அரசுக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும். மேலும் மாநில அரசு அதிகார எல்லைக்குள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும்.
இந்திய அரசியலமைப்பு அதிகார அமைப்பு எழுதபெற்ற மற்றும் நெகிழ்வற்ற அரசியலமைப்பு மேலாண்மை, சுதந்திரமான நீதித்துறை மற்றும் ஈரவை நாடாளுமன்றம் ஆகியனவாகும்.

7. இந்தியாவில் உள்ள மூன்றடுக்கு அரசாங்க முறை என்பது என்ன?

1.  பாராளுமன்றம், சட்டசபை, உள்ளட்சி அமைப்பு
2. மைய, மாநில, குடியரசு தலைவர் அமைப்பு
3. மைய, மாநில , குடியரசு தலைவர்
விடை: 1.  பாராளுமன்றம், சட்டசபை, உள்ளட்சி அமைப்பு
விளக்கம்
: சட்டவிதி 73 மற்றும் 74வது இந்திய அரசியலமைப்பு திருத்த சட்டங்கள் 1992 மூன்று அடுக்குக்கான உள்ளாட்சி அமைப்பு, அதிகார அமைப்புகள் வரையறை செய்தன. இது உலகின் வேறெந்த அரசியலமைப்பிலும் காணப்படாத ஒன்றாகும்.

8. சட்டவிதி 370ன் சிறப்பு என்ன?

1. ஜம்மு காஷ்மீர் பற்றியது.
2. ராஜஸ்தான் மாநிலம் பற்றியது
3. மத்திய் அமைச்சரவை
விடை: 1 ஜம்மு காஷ்மீர் பற்றியது
விளக்கம்
: 1957 ஆம் ஆண்டு ஜனவரி 26 முதல் அமலுக்கு வந்தது. ஜம்மு காசிமீர் மாநிலத்திற்காக தனி அரசியலைப்பு உருவாக்கப்பட்டது. இம்மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரத்தின்  மூலம் உருவாக்கப்பட்டது.

9. சூரத் பிளவு எப்பொழுது ஏற்பட்டது?

1. 1907
2. 1905
3.  1911
விடை:1.1907

விளக்கம்: சூரத் பிளவு 1907 ஆம் ஆண்டு முதல் சூரத் மாநாட்டில் மிதவாதிகளும் தீவிர வாதிகளும் இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் இரண்டாக பிரிந்தது. பால கங்காதர் தீவிரவாதிகளின் தலைவராகவும்,வா.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா தளபதியாகவும் செயல்பட்டார். பால கங்காதார திலகர், லாலாலஜபதிராய், பிபின் சந்திரபால், அரவிந்த் கோஷ் தீவிரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.

10. ஆதிகிரகந்தம் யாருடைய புனித நூல் ?

1. சீக்கியர் புனித நூல்
2. குரு ராமதாஸ்
3. சீக்கிய மதத்தின் இரண்டாவது குரு

விடை: 1. சீக்கியர் நூல்
விளக்கம்
: குரு அர்ஜூன் சிங் ஆதிகிரகந்தம் என்னும் நூலை தொகுத்தார். இது சீக்கியர்களின் வேதம் ஆகும். சீக்கியர்களின் காணிக்கை பெறும் முறை உருவாக்கப்பட்டது. சீக்கியர்களின் வேதம் என அழைக்கப்பட்டது.

 

சார்ந்த பதிவுகள்

 

 

English summary
The article tells about tnpsc question practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia