டிஎன்பிஎஸ்சி சார்பில் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் குரூப் 2 தேர்விற்கான முதற்கட்டத் தேர்வுகள் கடந்த 2018 நவம்பர் 18 ஆம் தேதியன்று நடைபெற்றது. மொத்தம் 1322 பணியிடங்களை நிறப்புவதற்காக இத்தேர்வு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, முக்கியத் தேர்வு தேதிகளை விரைவில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இப்பணியிடங்களுக்கான முக்கியத் தேர்வு நடைபெறும் தேதியினை தற்போது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகள் பிப்ரவரி மாதம் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடைபெற்ற தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் மட்டுமே இந்த முக்கியத் தேர்வில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்தான மேலும் விபரங்களை டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpscexams.in/ என்னும் லிங்க்கில் காணவும்.