குரூப் 4 தேர்வுக்கு இன்னும் சில ம ணி நேரங்களே இருக்கின்றன ரிவைஸ் செய்யுங்க தேர்வை வெல்லுங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு  சில மணி நேரங்கள் மட்டும்தான் கையில் இருக்கின்றது. தேர்வை குறித்த பயமோ அச்சமோ தேவையில்லை . லைட்டா படிங்க, நன்றாக தூங்கி எழவும். படப்படப்பு தேவைய்யில்லை. இப்பொழுது மனதினுள் ஒரு வெற்றிக்கான நம்பிக்கை இருக்க வேண்டும். அப்பொழுது நீங்கள் சிராக இயங்குவதற்கான சக்தி கிடைக்கும். 

1. சத்யமேவ ஜெயதே எங்கிருந்து எடுக்கப்பட்டது?

1 முண்டக உபநிஷத்
2 சாம வேதா
3 அதர்வ வேத

விடை:1. முண்டக உபநிஷத்

விளக்கம் : சத்யமேவ் ஜெயதே என்பது வாய்மையே வெல்லும் என்ற கொள்கையுடையது. நான்கு வேதங்களை போன்று முண்டக உபநிஷத்தும் தனித்தன்மை கொண்டது. முண்டக உபநிஷத் அதர்வ வேதத்தினுடன் தொடர்புடையது ஆகும்.

 

2. துன்பங்களுக்கு காரணம் என்று கூறியது எது?

1. புத்த கொள்கை
2. ஜெய்னிசம்
3. ஹீன்யான்

விடை: 1 புத்த கொள்கை
விளக்கம்:

புத்தம் கூறும் வாழ்வியலில் ஆசையே துன்பத்திற்கு காரணம் . துன்பத்தை வெல்ல ஆசையை ஒழிக்க வேண்டும் என்றது. வாழ்வியலில்  முறைக்கு தனிவழிகளை வகுத்தது புத்திசம். 

 

3. வேளாண்மைக்கு தொழில் துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் திட்டம் எது?

1 மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்
2 ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்
3 ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்
விடை: 1 மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்

விளக்கம்: தற்சார்பும் தன்னகத்தே திறனும் கொண்ட பொருளாதாரத்தை அடைவது மூன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் முதன்மை நோக்கம் ஆகும். வேளாண்மை தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

 

4. இராண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது?

1 மஹலானோபிஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டது
2 ஹெராட் தோமர் மாதிரியின் கீழ் உருவாக்கப்பட்டது
3 நாட்டு வளர்ச்சியினை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டது

விடை: 1. மஹலானோபிஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டது

விளக்கம் :

இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலகட்டமானது 1951 முதல் 1961 வரை இருந்தது. இத்திட்டம் தொழிற்துறைக்கு முன்னுரிமை அளித்தது. 

 

5. ஆசிய சிக்கல், ஒடிசாவில் புயல், குஜராத் நிலநடுக்கம், கார்கில் போர் போன்ற இடர்பாடுகள் ஒன்றாக எங்கே நடைபெற்றது?

1 1997
2 2001
3 1980
விடை: 1997

விளக்கம்:
இந்தியா ஒன்பதாம் ஐந்தாம் திட்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சியை நோக்கி போய் கொண்டிருக்கும் பொழுது இந்தியா இத்தகைய இழப்பை அடைந்தது. இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் உயிர் உடமைகளின் இழப்புகள் அதிகரித்தன. 

 

6.மாநில தேர்தலில் முதன் முறையாக நோட்டாவிற்கு சின்னம் எங்கு பயன்படுத்த பட்டது

1 2015 ல் பீகார் மாநில சட்டம்னறத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது
2 தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்டது
3 2013 இல் நாடுதழுவிய அளவில் இந்த நோட்டா முறை பயன்பட்டது

விடை: 3. 2013 இல் நாடு தழுவிய அளவில் இந்த நோட்டா முறை பயன்பட்டது

விளக்கம்: 2013 ஆம் ஆண்டு வழக்குகள் மூலம் நாடு தழுவிய வாக்காளர் பாதுகாப்பு கருதி யாருக்கும் ஒட்டளிக்க விருப்பமற்ற நிலையை தெரிவிக்க தெரிவிக்கும் நோட்டா பிரிவுக்கு தனிமுக்கியத்துவம் கொடுத்தனர் . முதன் முறையாக நாடுதழுவிய அளவில் இந்த நோட்டா முறைப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

 

7. பிரதான் மந்திரி ஜன்தன யோஜனாவின் திட்டத்தில் எந்த கார்டு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது ?

பிராதான் மந்திரி ஜந்தன் யோஜனாவில் முதலாம் ஆண்டு திட்டகாலத்தில் ரூபே கார்டு வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை கொண்டு ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். இணைய தளங்களில் மூலம் பணம் செலுத்தவும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை வாங்கலாம்.

8 லீடு பேங்க் திட்டம் என்றால் என்ன?

1 ஊரகப்பகுதிகளில் வங்கி சேவை செழுமையாக்கும் நோக்கத்தோடு லீடு பேங் திட்டம் அறிமுகப்படுத்தபட்டது

2 நகர வங்கி சேவைக்கு கொண்டு வரப்பட்து
3 கிராமங்கள் நகரங்கள் சேவையை துரிதப்படுத்த கொண்டு வரப்பட்டது

விடை: 1. ஊரகப்பகுதிகளில் வங்கி சேவை செழுமையாக்கும் நோக்கத்தோடு லீடு பேங் திட்டம் அறிமுகப்படுத்தபட்டது

விளக்கம்:
ஊரகபபகுதிகளில் வங்கி சேவை செழுமையாக்கும் நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு திட்டமே இது. கேட்கில் கமிட்டியின் பரிந்துரையினை அடிப்படையாக கொண்டு நிதியியல் உள் கட்டமைப்பை மேம்படுத்த பரிந்துரைகள் வழங்க மத்திய ரிசர்வ் வங்கி எப். எஸ்.நரிமன் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது.

 

9. தேசிய உணவு வழங்கலுக்கான கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு எது?

1 உணவு வழங்கலுக்கான கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில் தேசிய உணவு இணைப்புத் தொகுப்பு ஏற்படுத்தப்பட்டது

2 உணவு பொருட்களுக்கான விளைச்சல் சந்தை ஏற்படுத்தப் படட்து

3 தேசிய உணவு பொருளின் சந்தை பொருட்களின் பரிமாற்ற அமைப்பு

விடை: 1 உணவு வழங்கலுக்கான கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில் தேசிய உணவு இணைப்புத் தொகுப்பு  ஏற்படுத்தப்பட்டது

விளக்கம் :

உணவு வழங்கலுக்கான சந்தையின் மூலம் தன்னிறைவு பொருளாதாரம் அடைதல், தொழில் ஏற்றுமதி தேவைகள் முதலானவற்றை எதிர்கொள்ளும் அளவிற்கு வேளாண் உற்பத்தியை பெருக்குதல் 

10. ரத்தம் கொடு சுதந்திரத்தை தருகிறேன் என்றவர் யார்?

1 சுபாஷ் சந்திர போஸ்
2 ராபிகாரி போஸ்
3 வல்லபாய் பட்டேல்

விடை: 1. சுபாஷ் சந்திர போஸ்

விளக்கம் :
சுபாஷ் சந்திரபோஸ் 1944 ஆம் ஆண்டு பர்மாவில் தன்னுடைய இந்திய ராணுவத்தின் முன் சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய உரையில் ரத்தம் கொடு சுதந்திரத்தை தருகிறேன் என்றார்.

 

சார்ந்த பதிவுகள்:

குரூப் 4 தேர்வுவினை வெல்ல ரிவைஸ் செய்யவும் தேர்வில் வெற்றி பெறவும்

குரூப் 4 தேர்வை வெல்ல படிச்சதை நல்ல ரிவைஸ் பண்ணுங்க

English summary
Article tells about question bank for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia