குரூப் 4 தேர்வுகளுக்கான கேள்வி பதில் படியுங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும்.டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கொஸ்டின் பேங்குகள் ரிவைஸ்  செய்து நன்றாக படிக்கவும் தேர்வை வெல்லவும்.

குரூப்4 தேர்வில் நடப்பு நிகழ்வுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. கட் ஆப்பில் அதிகம் மதிபெண்கள் பெற தேர்வு எழுதுவோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

மொழிப்பாடத்தில்  இருந்து 100 கேள்விகளுக்கு சரியான விடைகொடுத்தால் உங்களுக்கான 70 %  வேலை உறுதி என்று சொல்லுவேன். பாடங்களை சரிசமமாக பிரித்து ரிவைஸ் செய்யுங்கள் போதுமானது ஆகும். 

1. 2018 ஆம் ஆண்டின் குடியரசு தினவிழாவில் இந்தியாவின் சிறப்பு விருந்தினாராக பங்கேற்ற வெளிநாடு விருந்தினர் யார்

1 சீனா பிரதம்ர்
2 ஆசியான் அமைப்பில் உள்ள 10 நாடுகளின் தலைவர்கள்
3 பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள்

விடை: 2, ஆசியான் அமைப்பில் உள்ள 10 நாடுகளின் தலைவர்கள்

விளக்கம் : 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசு தினவிழாவில் பத்து நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

 

2. தமிழ்நாட்டில் ஸ்மார்ட் கார்டு குறித்து அரசின் அறிவிப்பு யாது

1 தமிழ்நாட்டில் மார்ச்1 முதல் ஸ்மார்ட் கார்டு அவசியம்
2 ஸ்மார்ட் கார்டு தமிழ்நாட்டில் கூட்டுறவு தொழிலுக்கு உதவும்
3 சிறு தொழில் தொடங்குவோர்க்கு


விடை: 1,தமிழ்நாட்டில் மார்ச்1 முதல் ஸ்மார்ட் கார்டு அவசியம்

விளக்கம் : தமிழ்நாட்டில் ஸ்மார்ட் கார்டு மார்ச்,1, 2018 முதல் அவசியம் அனைவரும் வைத்திருக்க வேண்டும். ரேசன் அட்டைகளின் ஆயுல் காலம் முடிவுக்கு கொண்டு வந்து சுமார்ட் கார்டின் மூலம் தேவைப்படும் பொருட்களை பெறலாம்.

 

3. தேசிய வாக்காளர் தினம் எது

1 ஜனவரி 26

2 பிப்ரவரி 10
3 டிசம்பர் 10

விடை: 1, ஜனவரி 26

விளக்கம் :

1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் நாள் முதல் இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட நாளை நினைவுகூறும் விதமாக தேசிய வாக்களர் தினம் கொண்டாடப்படுகின்றது. 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிப்பதை தம் கடமையாக கருத வேண்டும்.
2018 ஆம் ஆண்டுக்கான தேசிய வாக்காளர் தினம் எட்டாவது வாக்காளர் தினம் ஆகும்

 

4 மொராக்கோ குடியரசு எத்தனை ஆண்டுகளுக்குப்பின் ஆப்பிரிக்க யூனியனுடன் இணைக்கப்பட்டது

1 30
2 33
3 60

விடை: 2,33

விளக்கம் : மொராக்கோ குடியரசு வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது அட்லாண்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்திருக்கின்றது. 

5. உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர்

1 ஜப்பான்
2 சீனா
3 இந்தியா

விடை :3, இந்தியா

விளக்கம்:
உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா இருக்கின்றது என ஸ்டாக்கோம் அனைத்துலக அமைதி ஆய்வு கழகம் அறிவிக்கையில் தெரிவித்தது.

 

6 இந்திய அஞ்சல்துறை வங்கியின் சேவைகள் எங்கு தொடங்கப்பட்டுள்ளது

1 சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் மற்றும் ஜார்கண்ட்டில் ராஞ்சி
2 மத்திய பிரதேச தலைநகர் போபால் மற்றும் மகாராஸ்டிரா மும்பை
3 தமிழ்நாடு சென்னை, கேரளா கொச்சின்

விடை: 1.சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் மற்றும் ஜார்கண்ட்டில் ராஞ்சி

விளக்கம் : இந்திய அஞ்சல் நிறுவனத்தின் வங்கி சேவைகள் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரிலும், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியிலும் வங்கி சேவைகள் துவங்கவுள்ளன. பொதுத்துறை வங்கி என்பதால் குறிப்பிட்ட வரையரைக்குள் மட்டுமே வட்டி விகிதத்தை பயன்படுத்த முடியும்.

 

7. மிண்ணணு முறையில் ஊதியம் வழங்குதல் என்பது என்ன

1 சம்பளம் வழங்குதலில் ஊழியர்களுக்கு பிரச்சனை
2 ரொக்க பணபரிமாற்றத்தை குறைக்கவே மத்திய அரசு வலியுறுத்தலின்படி ஊதியம் வழங்க வங்கி காசோலை அல்லது வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்ய முடிவு எடுத்துள்ளது
3 வங்கி கணக்கில் பணம் வைத்திருப்பது தொடர்பாக ஊதியத்தில் மாற்றம்

விடை: 2. ரொக்க பணபரிமாற்றத்தை குறைக்கவே மத்திய அரசு வலியுறுத்தலின்படி ஊதியம் வழங்க வங்கி காசோலை அல்லது வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்ய முடிவு எடுத்துள்ளது

 

8. மாற்றுதிறனாளிகள் உரிமைச் சட்டம் எப்பொழுது அமலுக்கு வந்தது

1 ஏபரல் 14, 2017,
2 பிப்ரவரி 10, 2017
3 செப்டம்பர் 15, 2017

விடை: 1, ஏப்ரல் 14, 2017

விளக்கம் : மாற்றுதிறனாளிகள் உரிமைச் சட்டம் ஏபரல் 14,2017 முதல் நடைமுறைக்கு வந்தது. மாற்றுதிறனாளிகளுக்கான தேவைகள் அவர்களுக்கான உரிமைகளை வரையறுத்து கொண்டு வருதல் போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

 

9. புன்னகை திட்டம் அறிவித்துள்ள மாநிலம் எது

1 கேரளா
2 தமிழ்நாடு
3 ஆந்திரப் பிரதேசம்

விடை: 1,கேரளா

விளக்கம்: கேரளா அரசு புன்னகை என்னும் திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு உட்ப்பட்ட 60 வயதினருக்கு கீழ் உள்ள முதியோர்க்கு இலவச பல்செட் திட்டம் வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக 1500 பேருக்கு இலவச பல்செட் வழங்க திட்டமிட்டுள்ளது.

 

சார்ந்த பதிவுகள்:

குரூப் 4 தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிங்க எக்ஸாம் ரொம்ப பக்கத்தில வந்துருச்சு

English summary
article tells about Tnpsc questions practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia