குரூப் 4 தேர்வுக்கு தயாரா இன்னும் பத்தே நாட்கள்தான் கையில் உள்ளது

Posted By:

டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வுக்கான கேள்வி பதில்கள் தொகுப்பு தேர்வு எழுதுவோர்கள் நன்றாக படித்தலுடன் டெஸ்ட்கள் எழுதவும் .

குரூப் 4 தேர்வுக்கான கேள்விகள் குறித்த சரியான ஒரு பார்வை கொண்டிருத்தல் அவசியம் ஆகும். 

சரியான திட்டமிடலில் பாடங்களை விரைந்து படித்தல் மிக அவசிமாகும்.

சுற்றுசூழலுக்கு ஏற்ப அதிக படித்தலுடன் ஆரோக்கியத்தில் கவனம் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

நல்ல தூக்கம் சுறுசுறுப்பான எனர்ஜியை தரும் அதனை தூங்கி எழுந்து படிக்கும் பொழுது நல்ல ஆற்றலுடன் செயல் பட முடியும். 

தேர்வு காலத்தில் அதிக நேரம் கண் முழிக்க வேண்டாம். ரிவைஸ் மட்டும் செய்யுங்கள் டெஸ்ட் எழுதுங்கள் மேற்குறிப்பிட்ட அனைத்தும் தேர்வு காலத்தில் இடைவிடாது செய்ய வேண்டும். 

1. 2018ஆம் ஆண்டின் ஐஎம்எஃபின் உலக பொருளாதார வளர்ச்சிப் பட்டியிலில் இந்திய வளர்ச்சி சதவிகிதம் எத்தனை

விடை: 7.4%

விளக்கம் :
இந்தியாவின் 2019ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி குறியீட்டின் மதிப்பு 7.8% மாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த உலக பொருளாதார வளர்ச்சி குறியீட்டில் 2018 ஆம் ஆண்டின் சீனாவின் வளர்ச்சி குறியீடு 6.6 எனவும் அது 2019 இல் 6.4 ஆக இருக்கும் எனவும் தெரிவித்தது.

 

2.அணை பாதுகாப்பு குறித்து உலக மாநாடு நடத்திய நகரம் எது

விடை: திருவனந்தபுரம்

விளக்கம்: அணை பாதுகாப்பு மாநாடு திருவனந்தபுரத்தில் 23.1.2018இல் தொடங்கியது. மாநாட்டை கேரளமுதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இணைந்து துவங்கினார்கள். 550 பேர் 20 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அணை பாதுகாப்பு குறித்த நீர்வளத்துறை சில அறிக்கைகளையும் கொடுத்துள்ளது. மேலும் மாநாட்டில்  அணைப் பாதுகாப்பு மற்றும் அதனை கண்காணித்தல் புதுப்பித்தல் குறித்தும் பேசப்பட்டது.

3. கிரேக்க தூதுவர் டைமாஸ்கஸ் மகதத்திற்கு யாருடைய ஆட்சி காலத்தில் வந்தார்

விடை: பிந்து சாரா

விளக்கம் : சந்திர குப்த மௌரியரின் மகன் பிந்துசாரா காலத்தில் டைமாஸ்கஸ் வருகை புரிந்தார். மெகஸ்தானிஸ்வுடன் இணைந்து டைமாஸ்கஸ் முக்கிய நிர்வாகங்களை குறித்து அறிவித்தார். டைமாஸ்காஸ் அத்துடன் ஆண்டிகாஸை 1 செலுக்கஸ் நிகேடர் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.

4. ராத் நாச்சா நடனம் எந்த மலைவாழ் மக்களால் பின்ப்பற்றப்படுகின்றது

விடை: சத்தீஸ்கர்

விளக்கம்: சத்தீஸ்கர் மாநில மலைவாழ் மக்களால் ராத் நாச்சா நடனம் ஆடப்படுகின்றது. தீபவளிக்கு பின் வரும் தேவ் உத்தி ஏகாதஸி அன்று இந்த நடனம் ஆடப்படுகின்றது. இந்த நடனபாணி யது  வம்சத்தினரால் பின்ப்பற்றப்படுகின்றது. இந்த நடனங்கள் அச்சம் தரும்  மத நம்பிக்கைகளை கொண்டுள்ளது.

 

5. சில்வர் டங்கா மற்றும் காப்பர் ஜிட்டால் காயின்கள் அறிமுகப்படுத்தப்பட்டது யாருடைய காலத்தில்

விடை: இல்துத்மிஸ்

விளக்கம்: இல்துத்மிஸ் சில்வர் டங்கா, காப்பர் ஜிட்டால் போன்ற இரு நாணயங்களிய டெல்லி சுல்தான் காலத்தில் அறிமுக்கப்படுத்தினார். இல்துத்மிஸ்தான் முதன் முதலில் முழுமையான அரபிக் நாணயங்களை கொண்டு வந்தவர். டெல்லி சுல்தானியத்தின் தங்க டங்காக்களை கொண்டு வந்தவர் பால்பன் ஆவார்.

6. பக்ஸார் போர் பிரிட்டிஸ் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் யாருக்கிடையே நடைபெற்றது.

விடை: மீர் காசிம்

விளக்கம் : பக்ஸார் போர் 22 அக்டோபர், 1764இல் நடைபெற்றது.பிரிட்டிஸ் ஹெக்டர் முன்ரோ படைக்கு தலைமை தாங்கி பெங்கால் நாவாப் மீர் காசிம், நாவாப் ஆப் ஆவுத் மற்றும் முகலாய அரசர் ஷா ஆலம் 2 போன்றோரை எதிர்த்து வந்தார்.

7. எந்த மாநிலம் ஆசியாவின் 7வது ஸ்டீல் மாநாட்டை நடத்துகின்றது

விடை: ஒடிசா

விளக்கம் : 7வது ஆசிய ஸ்டீல் மாநாடு புவனேஷ்வரில் பிப்ரவரி 6 மற்றும் 7இல் நடைபெறவுள்ளது. இந்திய ஸ்டீல் அசோஸியன் இணைப்புடன் டாடா ஸ்டீல் கம்பெனி அதனை அறிவித்தது. இந்த மாநாட்டுக்கு 70 நாடுகளிலிருந்து உறுப்பினர்கள் பங்கேற்று பேசுவார்கள். 2018 ஆம் ஆண்டில் வேறுப்பட்ட சவால்களை ஸ்டீல் சந்திப்பதை குறித்து பேசுகின்றது.

 

8. கும்பால்கார் வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது

விடை: ராஜ்ஸ்மாந்த்

விளக்கம்: ராஜஸ்தானிலுள்ள ராஜஸ்மாந்த் மாவட்டத்தில் சுமார் 572 கிமீ பரப்பளவில் அமைந்த ஒன்றாகும். இந்த சரணாலயம் இந்திய சிறுத்தை, சோம்பல் கரடி, காட்டுப்பூணை போன்றவைகளின் இருப்பிடமாகும்.

9. இந்திய பாராளுமன்றத்தின் எத்தனை அவைகள் உள்ளன

விடை: 2

விளக்கம்இந்திய பாராளுமன்றத்தில் லோக் சபா என்னும் மக்களவையும் , ராஜ்ய சபா என்னும் மாநிலங்கள் அவையும் உள்ளது. லோக்சபாவில் மொத்தம் 545 பேர் உள்ளனர். 250 ராஜ்ய சபாவின் உறுப்பினர்கள் உள்ளனர்.லோக்சபா உறுப்பினர்கள் இந்தியாவில் பதினெட்டு வயது அடைந்த வாக்களர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். லோக் சபாவில் போடியிட 25 வயது முடிந்திருக்க வேண்டும்.

10. இந்தியாவில் டிஜிட்டல் வில்லேஜ் எது

விடை: இந்தியாவின் முதல் டிஜிட்டல் கிராமம் அகோதாரா

விளக்கம்: இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் சாப்கார்ந்தா மாவட்டத்தில் அகோதாரா கிராமத்தில் முதல் டிஜிட்டல் முறை செயல்படுகின்றது. இந்த கிராமம் ஐசிஐசிஐ வங்கியால் தத்தெடுக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. பணமற்ற பரிவர்த்தனைக்காக 2015 முதல் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் செயலாற்றி வருகின்றது. 2016 ஆம் ஆண்டில் பிரதம்ர் இந்த திட்டத்தை துவங்கினார்.

11. இந்தியாவின் நிதி ஆயோக் எனபது யாது

விடை: நிதி ஆயோக் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது.

விளக்கம் : இந்தியாவில் திட்டக்குழுவுக்கு மாற்றாக ஜனவரி 1, 2015 முதல் செயல்பட்டு வருகின்றது. நிதி ஆயோக்கின் தலைவராக பிரதமர் செயல்ப்பட்டு வருகின்றார். நிதி அமைப்பின் முதல் துணை தலைவர் அரவிந்த் பனகாரியா செப்டம்பர் 31, 2017 அன்று நியமிக்கப்பட்டார். 15 ஆண்டு செயல் திட்டம் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான கேள்வி பதில்கள்

English summary
The article tells about tnpsc practice question for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia