குரூப் 4 தேர்வுவினை வெல்ல ரிவைஸ் செய்யவும் தேர்வில் வெற்றி பெறவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான போட்டி தேர்வுக்கு இன்னும் சரியா 2 நாட்கள் கூட இல்லை நன்றாக ரிவைஸ் செய்யுங்க. மனதுக்கு அமைதி கொடுங்க நிதானமாக செயல்படுங்க. தேர்வை வெற்றி பெறுங்க.

1. மக்கள் தொகை கணக்கீடு புள்ளி விவரங்களிலிருந்து கிடைப்பவை யாவை?

1 சமுதாய புள்ளி விவரம்
2 கலாச்சார புள்ளி விவரம்
3 பொருளாதார புள்ளி விவரம்

விடை: சமுதாய புள்ளி விவரம்விளக்கம் : 1. சமுதாயப்புள்ளி விவரம்

விளக்கம்: தனிநபர்கள், குடும்பம் மற்றும் நகரம் ஆகியவற்றைப் பற்றிய புள்ளி விவரங்கள் சமுதாயப்புள்ளி விவரங்கள் ஆகும்.

 

2. கிஷான் விகாஸ் பத்திரம் என்றால் என்ன?

1 முதலீட்டு தொகை அஞ்சல் நிலையம் மூலம் செலுத்தலாம்
2 கிஷான் பத்திரம் பெறுதல்
3 முதலீடு வங்கில் செலுத்தலாம்

விடை: 1. முதலீட்டு தொகை அஞ்சல் நிலையம் மூலம் செலுத்தலாம்

விளக்கம் :
அஞ்சல் நிலையம் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் ரூபாய் 1000 , 5000, 10,000 என எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்து பத்திரங்கள் பெறலாம்.

இந்த திட்டகாலம் 8 வருடங்கள், 4 மாதம் (100 மாதம் ) கழித்து முதலீடு செய்த பணம் இரண்டு மடங்காக கொடுக்கப்படும். கொடுக்கும் தொகைக்கு வட்டி வீதமானது 8.7 % பெறலாம்.

 

3. எந்த மாநிலத்தின் பெரும்பகுதி வரண்டு இருப்பதால் குறைவான மக்கள் தொகையே அங்கு நிலவுகிறது ?

1. ராஜஸ்தான்
2. பஞ்சாப்
3. குஜராத்

விடை: 1.ராஜஸ்தான்
விளக்க்ம்:
50 செமீக்கும் குறைவாக மழைபெறும் பகுதிகளில் ஒன்றாக இராஜஸ்தான் உள்ளது
ஆரவல்லித் மலைத் தொடருக்கு மேற்கில் அமைந்துள்ள ராஜஸ்தான் ஏறத்தாழ 300 கிமீ அகலத்துடன் 640 கிமீ தூரத்திற்கு பரவியுள்ளது..

 

4. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?

1.5.58 கோடி,
2. 6.34 கோடி
3. 7.21 கோடி
விடை: 7.21 கோடி

விளக்கம் :
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி  7,21,47,030 உள்ளது. ஆண்களின் மொத்த மக்கள் தொகை 3,61, 37,975 கோடி.
பெண்களின் எண்ணிக்கை 3,60,09,055 கோடி

 

5. தீனதயாள் உபாத்யா அந்தோதயா யோஜ்னா திட்டத்தின் நோக்கம் என்ன?

1. நகர்புற இளைஞர்களின் வேலை வாய்ப்பை மேம்படுத்தும் வகையிலான திட்டம்.
2. கிராம இளைஞர்களை கண்காணித்தல்
3. கிராமத்தில் கணினி வசதிக்கு உத வியளித்தல்

விடை: 1 நகர்புற இளைஞர்களின் வேலை வாய்ப்பை மேம்படுத்தும் வகையிலான திட்டம்.

விளக்கம் :
நகர்புறத்தில் வாழும் இளைஞர்களின் வேலை வாய்ப்பை மேம்படுத்தும் வகையிலான இத்திட்டம் நகர்புற மக்கள் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் நாடு முழுவதும் 4041 நகரங்களில் அறிமுகப்படுத்துகின்றது.

 

6 கங்கை நதி தூய்மையாக்கும் திட்டத்தில் இந்தியாவிற்கு உதவும் நாடு எது

1. ஜப்பான்
2. சீனா
3. ரஷ்யா

விடை: ஜபபான்

விளக்கம் :
நமாமி கங்கை திட்டத்திற்கு உதவி புரிய ஜப்பான் அரசு உதவிப்புரிய நிதியுதவி மற்றும் தொழில் நுட்ப உதவி வழங்குகின்றது.

சிறப்பு மேலாண்மை குழு ஒன்றை ஏற்படுத்தி ஜப்பான் அரசு ஐந்து ஆண்டுகளின் 35 மில்லியன் டாலர் வழங்க உறுதியளித்தது.

 

7. நூறு ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திடுபவர்?

1. ரிசர்வ் வங்கி கவர்னர்
2. மத்திய நிதியமைச்சர்
3. கார்பரேசன் வரி

விடை:1. ரிசர்வ் வங்கி கவர்னர்

விளக்கம்: இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரூபாய் 10, 20, 30, 50, 100, 500 தொகைகள் நோட்டுகளை வெளியிடுகின்றது

இந்தியாவின் ரிசர்வ் வங்கி கவர்னர் நோட்டுகளில் கையெழுத்திடுவார். இந்தியாவில் நாணயங்கள் வெளியிடும் உரிமையை இந்திய நிதித்துறை அமைச்சர் பெற்றிருக்கின்றார்.

 

8. பஞ்சேஷ்வர் பன்நோக்கு நிர்மின் திட்டம் என்றால் என்ன?

1. இந்தியா- நேபாளத்தில் பாயும் மகாகாளிநதி குறுக்கே கட்டும் பன்நோக்கு திட்டமே பஞ்ச்சேஷ்வர் திட்டம் ஆகும்

2. இந்தியா- மியான்மார் எல்லை திட்டம்

3. இந்தியா பூடான் இடையே வர்த்தகம் பரிவர்த்தனை

விடை: 1 இந்தியா- நேபாளத்தில் பாயும் மகாகாளிநதி குறுக்கே கட்டும் பன்நோக்கு திட்டமே பஞ்ச்சேஷ்வர் திட்டம் ஆகும்

விளக்கம் : இந்தியா நேபாள நாடு முயற்சியில் சுமார் 6720 மெகாவாட் திறன் கொண்ட மின்சாரம் தயாரிக்க கட்டப்படும் திட்டமாகும். நேபாளத்தில் 9,300 ஹெக்டர் பரப்பளவிளான நிலமும் இந்தியாவில் 1.6 மில்லியன் ஹெக்டர் பரப்பளவிலான நிலமும் நீர்ப்பாசன வசதியை பெறும்.

 

9. இரண்டாம் வட்ட மேஜை மாநாடு என்று நடைபெற்றது

1.செப்டம்பர் 7, 1931,
2. நவம்பர் 6 , 1930
3. மார்ச் 7, 1931

விடை: செப்டம்பர்7, 1931,

விளக்கம் : இரண்டாம் வடட் மேஜை மாநாட்டில் காந்தி காங்கிரஸ் பிரதிநிதியாக கலந்து கொண்டார். சரோஜினி நாயுடு இந்திய பெண்ணாக கலந்து கொண்டார். காந்தி இந்தியாவுக்கு பிரிட்டிஷ் செய்ய வேண்டிய தேவைகளை முன்வைத்தார்.

 

10. தேசிய நீதிபதிகள் ஆணையம் எப்பொழுது கொண்டுவரப்பட்டது

1. 13, அக்டோபர் 2014
2. 15 செப்டம்பர் 2017
3. 1 ஜனவரி 2017
விடை: 1.13அக்டோபர், 2014

விளக்கம் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யும் அமைப்பு கொஜியம் என அழைக்கப்படுகின்றது. தேசிய நீதிபதிகள் ஆணையம் ஏற்படுவதே இம்மசோதாவின் குறிக்கோளாகும்.

 

 

 

சார்ந்த பதிவுகள்:

குரூப் 4 தேர்வை வெல்ல படிச்சதை நல்ல ரிவைஸ் பண்ணுங்க 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில் படிக்கவும் தேர்வை வெல்லவும்

English summary
Article tells about Tnpsc question practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia