பாம்புகளே இல்லாத 'கடல்' எது தெரியுமா?

போட்டித் தேர்வு புத்தகங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசுப் பள்ளிப் பாடப் புத்தகங்களே போதுமானது. இத்தேர்வுகளில் கடினமாக படிப்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே எளிதாக வெற்றி பெறலாம்.

By Kani

போட்டித் தேர்வு புத்தகங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசுப் பள்ளிப் பாடப் புத்தகங்களே போதுமானது. பெரும்பாலான கேள்விகள் (95 சதவிகிதத்துக்கு மேல்) பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்தே கேட்கப்படுகின்றன.

எனவே, சந்தையில் கிடைக்கும் புத்தகங்களை அதிகம் படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். கடந்த ஆண்டு வினாத்தாள்களைக்கொண்டு, உங்களது தயாரிப்பை அவ்வப்போது சரியான வழியில் உள்ளதா எனச் சோதித்துக்கொள்ளுங்கள்.

 பாம்புகளே இல்லாத கடல் எது?

பாடவாரியாக அட்டவணை தயார் செய்து கொண்டு, தேர்வுக்கு முன் குறைந்தபட்சம் 10 மாதிரி தேர்வுகளையாவது எழுத வேண்டும். இது உங்களை மீண்டும்,மீண்டும் கூர்தீட்டும்.

இத்தேர்வுகளில் கடினமாக படிப்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே எளிதாக வெற்றி பெறலாம். அந்தவகையில் போட்டித்தேர்வுக்கான சில வினா,விடைத்தொகுப்பு உங்களுக்காக...

கேள்வி1: முதல் கர்நாடகப் போர் எப்போது நடைபெற்றது?

விடை: முதல் கர்நாடகப் போர் கி.பி.1746-1748

விளக்கம்: முதல் கர்நாடகப் போர் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது. இதில் பிரெஞ்சு படைகள் தோற்கடிக்கப்பட்டு சென்னை ஆங்கிலேயர் வசம் வந்தது.

கேள்வி2: கல்லீரலில் சேகரிக்கப்படும் வைட்டமின் எது?

விடை: கே

விளக்கம்: கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களில் வைட்டமின் கே-வும் ஒன்று. ரத்த உறைதலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்து, வைட்டமின் கே. வைட்டமின் கே குறைபாடு ஏற்பட்டால், ஏதாவது சிறிய காயம் ஏற்பட்டாலும் ரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும்.

தேவையான நேரத்தில் ரத்தத்தை உறையவைப்பதற்கும் வைட்டமின் கே-தான் உதவுகிறது.

கேள்வி3: ORUY என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களை ஒரு எழுத்து மீண்டும் வராதபடி, எத்தனை அர்த்தமுள்ள வார்த்தைகளை எழுத முடியும்?

விடை: 3

விளக்கம்: கொடுக்கப்பட்டுள்ள ORUY என்ற வார்த்தையைக் கொண்டு ஒரு எழுத்து கூட மீண்டும் வராதபடி YOUR, OUR, OR ஆகிய அர்த்தமுள்ள வார்த்தைகளை நம்மால் எழுத முடியும்.

கேள்வி4: ஒரு வகுப்பில் சந்திரன் என்ற மாணவன் மேலிருந்து 7வதாகவும், கீழிருந்து 26வதாகவும் இருந்தால், வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை என்ன?

விடை : 32

விளக்கம்: கொடுக்கப்பட்டுள்ளதாவது, சந்திரன் மேலிருந்து 7வது இடத்தில் உள்ளார் எனில் அவருக்கு முன் 6 பேர் உள்ளனர். சந்திரன் கீழிருந்து 26 வது இடத்தில் உள்ளார் எனில் அவருக்கு பின் 25 பேர் உள்ளனர்.

சந்திரனைத் தவிர்த்து வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை = 6 + 25
= 31 எனவே, சந்திரனையும் சேர்த்து வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 31 + 1 = 32

கேள்வி5: சிறுநீரகத்தின் அடிப்படை அலகு என்ன?

விடை: நெப்ரான்

விளக்கம்: சிறுநீரகம் நம் உடலின் முக்கிய உறுப்பு. இரத்தத்தை சுத்தம் செய்வது, உடலில் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது, உடம்பில் எவ்வளவு நீர், எவ்வளவு உப்பு, எவ்வளவு எலக்ட்ரோலைட் (Electrolite) வேண்டும் என்பது போன்ற ஏராளமான பணிகளை செய்கிறது. ஒவ்வொரு சிறுநீரகத்துக்கு உள்ளேயும், சுமார் 1,00,000-1,250,000 நெப்ரான்கள் உள்ளன.

இவைகள்தான் சிறுநீர் வடிகட்டிகள். ஆனால் ஒவ்வொரு நெப்ரானும் தனித்தனியாய் இயங்கி சிறுநீரை வடிகட்டுகின்றன. ஒன்றுடன் ஒன்று இணைத்து செயல்படாது. இவை ஒவ்வொன்றின் உள்ளேயும் ஏராளமான இரத்த தந்துகி முடிச்சுக்கள் உள்ளன. ஒரு நெப்ரானின் அளவு 50 மி.மீ மட்டுமே..!

கேள்வி6: தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னிச்சை அமைப்புகள் யாவை?

விடை: ப்ரஷார் பாரதி,மத்திய திரைப்பட தணிக்கைக் குழு

விளக்கம்: ப்ரஷார் பாரதி- prashar bharathi நவம்பர் 1997-ல் நிறுவப்பட்டது.தில்லியை தலைநகராகக் கொண்டு, அகில இந்திய வானொலி,தொலைக்காட்சி ஆகிய பொழுது போக்கு ஊடகங்களை மேலாண்மை செய்கிறது.

மத்திய திரைப்பட தணிக்கைக் குழு: central board of flim certification 1952-ல் நிறுவப்பட்டு, மும்பையை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது.

கேள்வி7: பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிப்பெயர்க்கபட்டுள்ளது?

விடை: 55 மொழி

பகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்று. பகவத் கீதை என்பதற்கு பகவானின் பாடல்கள் என்று பொருள். பகவத் கீதைக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். ஆதி சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று இந்து சமயப் பெரியோர்களும், நிம்பர்க்கர், வல்லபர், ஞானேசுவரர் போன்றவர்களும் எழுதிய பழைய உரைகளே பல உரைகளுக்கு வழிகாட்டிகளாக இருக்கின்றன.

கேள்வி8: புகழ் பெற்ற லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார்?

விடை: நிஜாமி

விளக்கம்: லைலா மஜ்னு காதல் காவியம் 7 ஆம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் வடக்கில் வாழ்ந்த காயிஸ் இப்ன் அல் முல்லாவாஹ் எனும் இளைஞனை வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எழுத்தப்பட்டது

கேள்வி9: பாம்புகளே இல்லாத கடல் எது?

விடை: அட்லாண்டிக் கடல்

விளக்கம்: அயர்லாந்தில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடல் தொடங்குகிறது. அட்லாண்டிக் பெருங்கடல் (Atlantic Ocean) உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடலாகும்.

இது 106,400,000 சதுர கிலோ மீட்டர் (41,100,000 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்டது ஆகும். புவிப்பரப்பில் சுமார் 20 சதவீத இடத்தையும், புவியின் நீர்ப்பரப்பில் சுமார் 29 சதவீத இடத்தையும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆக்ரமித்துள்ளது.

கேள்வி10: கீழ்கண்ட எண் தொகுப்பில் எந்த ஒரு எண் மற்ற எண்களிலிருந்து வேறுபட்டுள்ளது.
217, 103, 241, 157, 131

விடை: 217

விளக்கம்: கொடுக்கப்பட்ட 103, 241, 157, 131 ஆகிய எண்கள் அனைத்தும் பகா எண்களாகும். எனவே, இக்குழுவில் வேறுபட்டுள்ள எண் 217

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Questions and Answers
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X