நடப்பு நிகழ்வுகள் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல உதவுகின்றது

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு நன்றாக படிக்க வேண்டும் . தேர்வை வெல்ல வேண்டும் என்ற கனவு கொண்டு படிக்கும் தேர்வர்களே உங்களுக்கான போட்டி தேர்வை வெல்ல தமிழ் கேரியர் இந்தியா கல்வித்தளம் வகுத்துள்ள கேள்வி பதில்களின் தொகுப்பு படியுங்கள்.

போட்டி தேர்வை வெல்ல உதவும் கேள்வி பதில்களின் தொகுப்பு படிங்க

1 பாலிகாதான் அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையேயான கூட்டு இராணுவ பயிற்சி எங்கு நடைபெற்றது

விடை:மணிலாவில்

2 இந்தியா மற்றும் சிலி நாடுகளுக்கிடையே என்ன ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

விடை: முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம்

3 காலாரா நோய் பரவலால சுகாதார அவசரநிலை பிரகடனம் எந்த நாட்டில் அறிவிக்கப்பட்டது

விடை: யேமன்

4 இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான கூடுகை எங்கு நடைபெற்றது

விடை: ஐக்கிய அரபு எமிரேட்சில்

5 உலகளவில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கின்றது

விடை: 8வது இடத்தில்

6 இந்தியாவிலேயே முதன் முறையாக எந்த சிட்டியூனியன் வங்கி கிளையில் வாடிக்கையாளர் சேவையில் மனித உருவம் கொண்ட ரோபோ பயன்படுத்தப்பட்டது

விடை: சிட்டி யூனியன் தியாகராயர் வங்கி கிளை

7 சீன எல்லையின் அருகே எந்த நதி குறுக்கே கட்டப்பட்ட இந்தியாவிலேயே மிக நீளமான பாலம் மே 26, 2017 ஆம் தேதி பிரதமரால் துவக்கப்பட்டது

விடை:பிரம்ம புத்திரா

8 இந்தியா விவசாய ஆராய்ச்சி மையம் எந்த மாநிலத்தில் அமையவுள்ளது

விடை: அசாம்

9 இந்தியாவிலேயே அதிகம் பேர் நகரப் பகுதிகளில் வசிக்கும் மாநிலமாக எந்த மாநிலம் உள்ளது

விடை: தமிழகம்

10 சுவதேஷ் தர்ஷன் திட்டம் என்ற திட்டத்தின் நோக்கம் என்ன

விடை: கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே புதிய நடைபாலம் அமைக்கப்பட உள்ளது

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் வெற்றி துணை நடப்பு நிகழ்வுகள் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் மந்திரகோலாக திகழும் பொதுஅறிவு கேள்விகள்

English summary
here article tell about tnpsc current affairs for aspirants
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia