'வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)' கொண்டாடும் நாடு எது தெரியுமா?

By Kani

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பணி மோகம் மீண்டும் அதிகரித்து உள்ளது.

கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகள் பலரும் போட்டித் தேர்வு எழுதுவதில் ஆர்வம் காட்டி வருவதால் ஆயிரக்கணக்கான பதவிகளுக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பித்து இணையதளமே முடங்கும் அளவுக்கு வரலாற்று சாதனை படைத்து வருகின்றனர்.

'வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)' கொண்டாடும் நாடு எது?

 

ஆர்வமாக விண்ணப்பித்தால் மட்டும் போதாது விண்ணப்பித்த பின் இதற்கென்று நேரம் ஒதுக்கிப் பயிற்சி செய்வது அவசியம்.

ஒவ்வொரு விதமான கேள்விகளையும் விடாமல் பயிற்சி செய்து பார்க்கவும்.

அதிகாலை நேரம் மூளைத் திறன் கேள்விகளுக்குப் பயிற்சி செய்வதற்கு உகந்த நேரம். ஒவ்வொரு நாளும் அதிகாலை 3 மணி நேரம் இதற்கென்று செலவிடுவது அவசியம்.

என்னதான் கடுமையான முயற்சி இருந்தாலும் முயற்சியுடன் கலந்த பயிற்சி இருந்தால் வெற்றி வெகு தூரமில்லை. அந்த வகையில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக சில கேள்வி, பதில்கள்...  

கேள்வி:01. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆண்டு:

விடை: 1799 அக். 16

விளக்கம்: இ‌ந்‌திய சுத‌ந்‌திர‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு எ‌திராக த‌மிழக‌த்‌தி‌ல் இரு‌ந்து முத‌லி‌ல் குர‌ல் கொடு‌த்த பாளை‌யக்கார‌ர் கட்டபொம்மன்.

1760 ஆம் ஆண்டு யூசு‌ப்கான் நெற்கட்டுச் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கே‌ப்ட‌ன் பெள‌ட்ச‌ன் வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார்.

ஆ‌ங்‌கிலேயரை எ‌தி‌ர்‌த்து பலவகை‌யிலு‌ம் போராடிய ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன் 1799ஆ‌ம் ஆ‌ண்டு ‌அ‌க்டோப‌ர் மாத‌ம் 16ஆ‌ம் தே‌தி கய‌த்தாறு கோ‌ட்டை‌யி‌ல் தூ‌க்‌கி‌லிட‌ப்ப‌ட்டா‌ர்.

கேள்வி:02. விதவை மறுமணச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?

விடை: 1856

விளக்கம்: 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜா ராம்மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யா சாகர் போன்ற சீர்திருத்தவாதிகள் குறிப்பிடத்தக்கவர்கள்.

1856 ஜூலையில் தலைமை ஆளுநர் ஆலோசனைக்குழு உறுப்பினரான ஜே.பி. கிராண்ட் என்பவர் விதவை மறுமணம் குறித்த சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தினார்.

1856 ஜூலை 13 ஆம் நாள் இது நிறைவேற்றப்பட்டது. 1856 ஆம் ஆண்டு விதவை மறுமணச் சட்டம் என்று இது அழைக்கப்பட்டது.

கேள்வி:03. ஃபல்மினாலாஜி என்பது எதைப்பற்றிய படிப்பு?

விடை: மின்னல் பற்றிய அறிவியல்

விளக்கம்: மின்னல் பற்றிய படிப்பு ஃபல்மினாலஜி (Fulminology). ஒலியின் வேகத்தை விட ஒளியின் வேகம் அதிகம். இதனால்தான் முதலில் மின்னல் ஒளி தெரிந்து, சிறிய இடைவெளிக்குப் பிறகு இடிச் சத்தம் கேட்கிறது. ஓர் ஆண்டில், சுமார் ஒரு கோடியே அறுபது லட்சம் (1,60,00,000) மின்னல்கள் ஏற்படுவதாகக் கணித்துள்ளனர். காற்றில் மின்னலின் வேகம் மணிக்கு 2,20,000 கி.மீட்டர் ஆகும். 30,000 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் மின்னலின்போது உருவாகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கேள்வி:04. கேரளாவின் மிகப்பெரிய ஏரி எது?

விடை: வேம்பநாடு

விளக்கம்: வேம்பநாட்டு ஏரி அல்லது வேம்பநாட்டுக் காயல் இந்தியாவிலேயே மிகவும் நீளமான ஏரியாகும். கேரளத்தின் மிகப்பெரிய ஏரியான இது இந்தியாவின் பெரும் ஏரிகளுள் ஒன்று.

இந்தக் காயலின் பரப்பளவு 1512 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். ஆழப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்கள் இவ் ஏரியின் எல்லைகளாக அமைந்துள்ளன.

கேள்வி:05.பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?

விடை: திருநெல்வேலி

 

விளக்கம்: பத்தமடை பாய்கள், திருநெல்வேலி மாவட்டத்தின் பத்தமடை கிராமத்தில் தயாரிக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் வளரும் காய்ந்த கோரைப்புல் கொண்டு, பத்தமடை பாய்கள் பின்னப்படுகின்றன.

பிற இடங்களைக் காட்டிலும், இங்கு வளரும் கோரைப் புல் நல்ல தரமானவை. இந்த அழகிய கோரைப் புல்லினால் நெய்யப்படும் பாய்கள் குறுக்கு இழை பருத்தி அல்லது பட்டினால் ஆன இழைகளால் நெய்யப்படுன்றன.

கேள்வி:06. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?

விடை: லாசேன் (சுவிட்சர்லாந்து)

விளக்கம்: ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி.

உலகப் போர் சமயங்களில் மட்டும் (1940 & 1944) பனி ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.

1992 வரை பனி ஒலிம்பிக், கோடைக்கால ஒலிம்பிக்கும் ஒரே ஆண்டிலேயே நடைபெற்று வந்தது. இதை மாற்ற வேண்டி 1994-ல் மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக்கை நடத்தினார்கள்.

அதன்படி தற்பொழுது கோடைக்கால ஒலிம்பிக்கிற்கு பின் 2 ஆண்டுகள் கழித்து பனி ஒலிம்பிக் நடக்கும்.

கேள்வி:07. நடிகர் R.பார்த்திபனின் மகள் கீர்த்தனா எந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்?

விடை: கன்னத்தில் முத்தமிட்டால்

விளக்கம்: கன்னத்தில் முத்தமிட்டால் 2002இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும்.

இந்தத் திரைப்படம், இலங்கை இனப் பிரச்சனையை கதைக்கருவாகக் கொண்டு, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த தமிழ் படம்.

2003 ஜெருசலேம் திரைப்பட விழா, 2003 லாஸ் ஏஞ்சல்ஸ் இந்தியத் திரைப்பட விழா (அமெரிக்கா), 2003 தேசிய திரைப்பட விருது (இந்தியா), 2004 ரிவர்ரன் சர்வதேச திரைப்பட விழா (அமெரிக்கா), 2004 நியூ ஹவன் திரைப்பட விழா (அமெரிக்கா), வெஸ்ட்செஸ்டர் திரைப்பட விழா (அமெரிக்கா),2003 சிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழா (சிம்பாப்வே) போன்ற விழா மேடைகளில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.

கேள்வி:08."கவான்சா" என்பது எந்த நாட்டின் நாணயம்?

விடை: அங்கோலா

விளக்கம்: அங்கோலா ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியிலே தெற்காக அமைந்துள்ள ஒரு நாடு.
இந்நாட்டுக்குத் தெற்கு எல்லையில் நமீபியாவும், வடக்கே காங்கோ மக்களாட்சிக் குடியரசும், கிழக்கே சாம்பியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன.

இது வைரம், எண்ணெய், முதலிய பல கனிவளங்கள் நிறைந்த நாடு. அங்கோலாவானது 18 மாகாணங்களாகவும் 163 நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

கேள்வி:09."வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)" கொண்டாடும் நாடு எது?

விடை: ஜப்பான்

விளக்கம்: 20 வயதை அடைந்ததை கொண்டாடும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டதே அடல்ட்ஸ் டே. ஆண், பெண் இருபாலரும், பாருக்கு செல்வது, சிகிரெட் பிடிப்பது போன்ற செயல்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதை ஒவ்வெரு ஆண்டும் ஜனவரி 2வது வாரம் திங்கள் கிழமை கொண்டாடி வருகின்றனர்.

கேள்வி:10. தாஜ்மஹால் ______________ கல்லினால் கட்டப்பட்டது?

விடை: கூழாங்கல்

விளக்கம்: இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள் ஒன்று, இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் கூழாங் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது.

ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவரது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  TNPSC question answer in tamil
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more