தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுவதை முன்னிட்டு டிசம்பர் 22 முதல் 30 ஆம் தேதி வரையில் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசில் பணியில் உள்ளவர்களுக்கான துறை தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அரசுத் துறையில் பணியாற்றி வருபவர்கள் தங்கள் துறையில் பதவி உயர்வு பெற வேண்டும் என்பவர்கள் இந்த தேர்வை எழுதலாம். அரசு வேலை இல்லாதோர் பங்கேற்க முடியாது.
இதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு வரும் டிசம்பர் 22 முதல் 30 ஆம் தேதி வரையில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது டிசம்பர் 27 முதல் 30 ஆம் தேதி வரையில் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, இம்மாதம் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி துறை தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தேர்வுகள் 2020 ஜனவரி 5 முதல் 12 ஆம் தேதி வரையில் நடைபெறும் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்களுடைய தேர்வு நுழைவுச் சீட்டினை www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












