டிஎன்பிஎஸ்சி தேர்வில் மாடர்ன் இந்தியா பகுதி பற்றி அறிவோம்

Posted By:

டிஎன்பிஎஸ்சி மாணவர்களுக்கான போட்டி தேர்வில் வெல்லும் யுக்திகளில் முக்கிய யுக்தியாக வரலாற்றுப்பாடத்தில் மாடர்ன் இந்தியா என அழைக்கப்படும் நவீன இந்திய வரலாற்று பாடத்தை எவ்வாறு படிப்போம் என்று அறிந்துகொள்வோம். இந்திய வரலாற்றை விடுதலைக்கு முன்பு இந்திய விடுதலைக்கு பின்பு என்று பிரித்துகொள்வோம் .

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வரலாற்று பாடப்பகுதியில் வெற்றிபெற குறிப்புகள்

வாஸ்கோடமா வருகை ஐரோப்பிய தேசத்தினர் வருகை மற்றும் அவர்களின் பங்களிப்பு ஆகியவற்றை குறிப்புகளாக எடுத்துகொண்டால் போதுமானது டச்சு, பிரெஞ்சு, பிரான்ஸ், பிரிட்டிஸ் வருகை அவர்களின் தலைவர், தலைநகரம் ஆகியவற்றை படித்துகொள்ளுங்கள் .

கர்நாடகபோர்கள், மைசூர், மராத்தா, நேபால், சீக் போன்ற போர்கள் மொத்தம் 18 முதல் 22 வரை இருக்கும் அவற்றின் வருடங்கள் அந்த போரில் பங்கேற்ற ஜெனரல்கள் மற்றும் போர் நடந்த வருடம் மற்றும் உடன்படிக்கைகள் இவற்றில் நிச்சயமாக கேள்வி இருக்கும். கவர்னர், கவர்னர் ஜெனரலகள், வைசிராய் என மொத்தம் 22 பேர் வரை செய்த சீர்திருத்தங்கள் இருக்கும் அவற்றில் மிக முக்கிய 15 பேர் பற்றி படித்திருந்தால் போதுமானது ஆகும் .

வேலுர் கழகம், சிப்பாய் கழகம் அத்துடன் விக்டோரிய மகாராணி பேரறிக்கை அத்துடன் விடுதலை இயக்கங்கள், காங்கிரஸ தொடக்கம், இந்திய சீர்த்திருத்தவாதிகள் அவர்களின் இயக்கங்கள் மற்றும் வங்க பிரிவினை, சுதேசி இயக்கம், காங்கிரஸ் மாநாடுகள் மற்றும் அத்துடன் தீவிரவாதம், மிதவாதம் பிரிவுகள் காந்தி வருகை, காந்திய நிகழ்வுகள், சுபாஷ் சந்திர போஸ், மற்றும் பகத்சிங் அத்துடன் பிரிட்டிஸ் அறிவிப்புகள் இந்திய விடுதலை, நாடு பிரிவிணை அரசியலமைப்பு அத்துடன் முதல் பிரதமர் முதல் தேர்தல் திட்டமிடுதல் ஆகியவற்றை திட்டமிடுதல் போன்றவற்றை படிக்க வேண்டும் .

இவ்வவு தான் வரலாறு நவீன இந்திய வரலாற்றில் படிக்க வேண்டிய குறிப்புகள் தொகுத்து வழங்கிவிட்டேன். படிக்க வேண்டியது உங்களுடைய கடமை நான் குறிப்பிட்ட பகுதியில் இருந்துதான் கேள்விகள் இருக்கும் சரியாக திட்டமிட்டு படியுங்கள் வெற்றி உங்களை வந்தடையும்

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான பயிற்சி வினாக்கள் 

டிஎன்பிஎஸ்சி தேர்வில் எவ்வாறு புவியியல் பகுதியினை எதிர்கொளவது பார்போமா 

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் நன்றாகப் படிக்கவும்

English summary
above article telling about modern India history tips to aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia