குரூப் 4 பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) சார்பில் கடந்த 2019 ஜூன் மாதம் குரூப் 4 பணிக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து இத்தேர்விற்கான முடிவுகள் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
இதனிடையே தற்போது குரூப் 4 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் ஏப்ரல் 2, 3, 4, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி-யின் சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்களை www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.
இதனைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்குக் குறிப்பிட்ட நாளில், சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறும். இதற்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












